“வஸீம் தாஜூதீன் எனது குடும்பத்துடன் நெருக்கமான ஒருவர்”: நாமல்

wasimகொழும்பு: கொலை செய்­யப்­பட்­ட­தாக நம்­பப்­படும் பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மரணத்துக்கும் எமது குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வஸீம் என்பவர் எனது குடும்பத்துடன் நெருக்கமான ஒருவர். எங்களுடைய பாடசாலை காலத்தில் இருந்து சுமார் ஐந்து வருடங்களுக்கு மேல் நாங்கள் அவருடைய வீட்டுக்குச் சென்று அவரின் அம்மா மற்றும் சகோதர்களுடன் ஒன்றாக உணவு உண்டு ஒன்றாக இருந்துள்ளோம்.

எனவே வஸீம் தாஜு­தீனின் மரணத்துக்கும் எமது குடும்ப உறுப்பினர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்து கொள்கின்றேன் என்றார்.

wasim

றக்பி வீரரின் சட­ல­மா­னது கடந்த 2012 ஆம் ஆண்டு மே 16 ஆம் திகதி நார­ஹேன்­பிட்டி பிர­தே­சத்தில் சாலிகா விளை­யாட்டு மைதா­னத்தை அண்­மித்த பிர­தே­சத்தில் எரிந்த நிலையில் இருந்த கார் ஒன்­றுக்குள் இருந்து மீட்­கப்­பட்­டது.

அதனைத் தொடர்ந்து அது ஒரு விபத்து என பொலிஸார் தெரி­வித்­ததை அடுத்து அவரது ஜனாஸா உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­துடன் தெஹி­வளை ஜும் ஆ பள்­ளி­வாசல் மைய­வா­டியில் நல்­ல­டக்­கமும் செய்­யப்­பட்­டது.

Published by

Leave a comment