-
கிழக்கு ஊடக சங்கம்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வருகை தந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கனம்மிகு. இரா. சம்பந்தன் ஐயா அவர்களின் தலைமையிலான த.தே. கூட்டமைப்பின் தலைவர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களும் இன்று (08.08.2015) சனிக்கிழமை பிற்பகல் 02:30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களையும் சந்தித்து தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
இச்சந்திப்பு, மட்டக்களப்பு நகரில் மஹாத்மா காந்தி பூங்கா வீதியிலுள்ள கிழக்கு ஊடக சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் வி. பத்மசிறி சற்று முன்னர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இச்நத்திப்பின்போது, கிழக்கு ஊடக சங்கத்தின் அங்கத்தவர்களாகவுள்ள ஊடகவியலாளர்கள் மாத்திரமன்றி, இம்மாவட்டத்திலுள்ள ஏனைய தமிழ் – முஸ்லிம் ஊடகவியலாளர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளதுடன், நமது மாவட்டத்திற்கு வருகைதந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதுபெருந் தலைவர் மதிப்புக்குரிய இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் இம்மாவட்டத்தில் வாழக்கூடிய வாக்காளர்களான தமிழ் பேசும் மக்களுக்கு இச்சந்திப்பின் மூலம் கூறப்போகும் சுபச் செய்திகளை பொறுப்புணர்வுடன் பதிவு செய்து அதனை தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்கள் மூலமாக இம்மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் எடுத்துரைக்க வேண்டிய தமது கடமைப்பாட்டை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டுமெனவும் செயலாளர் வி. பத்மசிறி மேலும் வலியுறுத்தியுள்ளார்.


Leave a comment