நாடு பிளவுபடப் போவதாக மஹிந்த மட்டுமே பொய்ப் பிரசாரம்

rajithaகொழும்பு: புலம்பெயர் அமைப்புகள், போராளி கட்சிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பன ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என நிலைப்பாட்டிற்கு வந்துள்ள போதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே நாடு பிளவுபடப் போவதாக பொய் பீதியை பரப்பி வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க அரசியலுக்காக மஹிந்த ராஜபக்ஷ இனவாதத்தை தூண்டி வருவதாகவும் கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

நனிநாட்டு கோரிக்கையை பெரும்பாலானவ ர்கள் கைவிட்டு வருகின்றனர். எல். ரீ. ரீ. ஈ. சுயேச்சை குழு கூட தாம் தனிநாட்டு கோரிக்கை முன்வைக்கப் போவதில்லை என்றும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

வட்டுக்கோட்டையில் தனிநாடு கோரிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூட தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பகிருமாறு கோரியுள்ளது. ஆனால் நாடு துண்டாடும் பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

எங்கும் அவ்வாறு அச்சுறுத்தல் உள்ளது டயஸ்போரா கூட தனிநாட்டு கோரிக்கையில் இருந்து விலகி வருகிறது.

முன்பு போல டயஸ்போராக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு வரும் தொகை கணிசமாக குறைந்து வருகிறது.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர்வதே அரசாங்கத்தினதும் நிலைப் பாடாகும்.

வடக்கிற்கு சமஷ்டி அதிகாரம் வழங்க தயாரான ஜீ. எல். பீரிஸ் இன்று இனவாதம் பேசுகிறார். நாடு துண்டா டப்படும் என மஹிந்த ராஜபக்ஷ இனவாதம் தூண்டி வருகிறார்.

ஜெனீவா அறிக்கை தொடர்பாக அமைச்சரவையில் ஆராயப்படவில்லை. சர்வதேச சமூகம் ஏற்கும் சர்வதேச தரத்திலான உள்ளக விசாரணைக்கு நாம் தயார். ஐ. நா. அறிக்கை இரகசியமானது. அது இந்த மாதம் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்ட பின்னர் அவர் அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பார்.

அதன் பின் எமது நிலைப்பாட்டை வெளியிடு வோம் செப்டம்பர் மாதமே ஜெனீவா மாநாட்டில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

சர்வதேச சமூகம் இலங்கை குறித்து அன்றிருந்த முறுகல்நிலை இன்று கிடையாது. இலங்கை குறித்து அவை கெளரவமாக பார்க்கின்றன. கடந்த ஆட்சியை போன்று எம்மை சர்வதேச சமூகம் பார்க்கவில்லை.

யுத்தத்தின் போது இடம்பெற்ற கொலைகள் தவிர வெள்ளைக் கொடி ஏந்தி வருகையில் நடந்த கொலைகள், யுத்தத்தின் பெயரால் நடந்த கொலைகள் என்பவற்றுடன் தொடர்பு டையோரை பாதுகாக்க மாட்டோம்.

Published by

Leave a comment