Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சிறுமி சேயா கொலை தொடர்பில் பாடசாலை மாணவன் கைது

    கம்பஹா: அண்மையில் கொட்டதெனியாவ பிரதேசத்தில் 4 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 17 வயதான பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

  • பெஷாவர் விமானப்படைத் தளத்தில் அதிரடித் தாக்குதல்

    பெஷாவர்: பாகிஸ்தானின் வட மேற்கிலுள்ள பெஷாவர் நகரின் விமானப்படைத் தளமொன்றில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் படையினர் பதினேழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இராணுவம் கூறுகிறது. அதில் பதினாறு பேர் அத்தளத்தில் இருந்த பள்ளிவாசல் ஒன்றில் விடியற்காலை நேரத் தொழுகையில் இருந்தவர்களாவர்.

  • டுபாயில் பிரகாசிக்கும் இலங்கை இளைஞர்!

    டுபாய்: பல திறமையான வீரர்களின் திறமைகள் சில பொழுதுகளில் பொருளாதார நெருக்கடிகளால் அப்படியே இலை,  மறைகாயாய் மூடி மறைக்கப்பட்டுவிடுகின்றன. அப்படி தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கட்டை விட்டு தொழில் நிமித்தம் டுபாய் பயணம் ஆனவர்தான் ஏறாவூரைப்பிறப்பிடமாகக் கொண்ட 04 ஆகஸ்ட் 1992 இல் பிறந்த முஹம்மட் சியான்.

  • துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்

    மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக. சிறப்புகள்:-

  • ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கியது குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள்

    வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பரக் ஒபாமாவுக்கு, 2009ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டாலும், அவர் மீதான எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்றவில்லை என்று நோபல் பரிசு வழங்கும் குழுவின் முன்னாள் செயலர் தெரிவித்துள்ளார். ஒபாமாவுக்கு விருது வழங்கப்பட்டதன் மூலம் அவருக்கு ஒரு ஏற்றம் கிடைக்கும் என தமது குழுவினர் நம்பினர் என்று, அக்குழுவின் முன்னாள் செயலர் கெயிர் லுண்டெஸ்டாட் தமது நினைவலைகளில் கூறியுள்ளார்.

  • கல்முனை புதிய நகர அபிவிருத்தி சம்பந்தமாக பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்துரையாடல்

    ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை புதிய நகர அபிவிருத்தி சம்பந்தமாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நேற்று (17) வியாழக்கிழமை கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

  • காத்தான்குடி கிழக்கு 167பி பிரிவுக்கான சிவில் பாதுகாப்பு குழு

    எம்.ஐ. அப்துல் நஸார் காத்தன்குடி: காத்தன்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி கிழக்கு 167பி பிரிவுக்கான சிவில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. காத்தன்குடி பொலிஸாரின் ஏற்பாட்டில் புதிய காத்தான்குடியில் அமைந்துள்ள பலநோக்கு மற்றும் வாசிகசாலைகக் கட்டடத்தில் நேற்று (17) குறித்த பிதேசத்தின் கிராம சேவகர், அரசாங்க உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பெருமளவானோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

  • இந்தியா: உ.பியில் 368 பியூன் வெற்றிடங்களுக்கு போட்டிபோட்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா ?

    டெல்லி: அரசுப் பணியிடங்களில் கடைநிலைப் பணியான, பியூன் வேலைக்கு இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலவும் கடும் போட்டி குறித்த செய்திகள் பிரமிக்க வைக்கின்றன. அந்த மாநிலத்தில் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட 368 பியூன் வேலையிடங்களுக்கு போட்டிபோட்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா ? — 23 லட்சம் பேர் !

  • ஆப்கானில் ஐஎஸ் குழுவினர் பாடசாலைகளை மூடினர்

    ஜலாலாபாத்: இஸ்லாமிய அரசு என்று தன்னை வர்ணித்துக்கொள்ளும் குழுவினர் ஆப்கானிஸ்தானின் கிழக்கே 30 பள்ளிக்கூடங்களை மூடிவிட்டனர் என்று ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சகம் கூறுகிறது. நங்கர்ஹார் என்ற இந்த பாதிக்கப்பட்ட மாகாணத்தில் கல்வி அமைச்சகத்துக்காகப் பேசவல்ல ஒருவர், இந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை 57ஆக இருக்கும் என்று கூறினார்.

  • இங்கிலாந்தின் துடுப்பாட்ட பயிற்சியாளராக மஹேல ஜயவர்த்தன நியமனம்

    லண்டன்: முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான மஹேல ஜயவர்தன இங்கிலாந்தின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் அடிப்படையில் எதிர்வரும் பாகிஸ்தானுடனான இங்கிலாந்தின் டெஸ்ட் தொடரில் மஹேல ஜயவர்தன இங்கிலாந்துக்கான துடுப்பாட்ட ஆலோசகராக செயற்படவுள்ளார்.

  • காத்தான்குடி நகரசபையின் அடுத்த தவிசாளராக நீங்கள் விரும்புபவர் யார்?

    நீங்களும் வாக்களிக்கலாம்! இவ்வருடம் இடம்பெற்ற முக்கிய இரு தேர்தல்களின் எமது தேர்தல் கணிப்புகளுக்கு அதிகளவில் பங்காற்றிய உங்களது வாக்குப்பதிவு மறக்க முடியாதவை. இதே போல் “காத்தான்குடி நகரசபையின் அடுத்த தவிசாளராக நீங்கள் விரும்புபவர் யார்?” எனும் கணிப்பு எமது தளத்தில் இடம்பெறுகிறது. உங்களின் வாக்களிப்பு எமது ஊரின் அரசியல் கட்சிகளை மென் மேலும் பலப்படுத்தவும், தகுதியானவர் ஒருவரை மக்கள் தெரிவு செய்வதற்கு உங்கள் வாக்களிப்பு உதவியளிக்கும் எனவும் நம்புகிறோம். எஸ்.எச்.எம். அஸ்பர் எம்.ஐ.எம். ஜெஸீம்

  • எப்படியெல்லாம் கஞ்சா விக்கிறாங்கப்பா…! நாடு நல்லா உருப்படும்!!

    அநுராதபுரம்: உணவகம் ஒன்றை நடாத்திச் செல்லும் சாக்கில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுர பிரிவு போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

←Previous Page
1 … 322 323 324 325 326 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar