இந்தியா: உ.பியில் 368 பியூன் வெற்றிடங்களுக்கு போட்டிபோட்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா ?

india application unempடெல்லி: அரசுப் பணியிடங்களில் கடைநிலைப் பணியான, பியூன் வேலைக்கு இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலவும் கடும் போட்டி குறித்த செய்திகள் பிரமிக்க வைக்கின்றன. அந்த மாநிலத்தில் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட 368 பியூன் வேலையிடங்களுக்கு போட்டிபோட்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா ? — 23 லட்சம் பேர் !

ஒரு வேலையிடத்துக்கு 6,000 பேர் போட்டியிடுகிறார்கள் என்று கணக்காகிறது. இந்த நிலைமை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலவும் கடும் வேலையில்லாத் திண்ட்டாட்டத்தைக் காட்டும் ஒரு அளவுகோலாகக் கருதப்படுகிறது.

india application unemp
368 பியூன் வேலையிடங்களுக்கு போட்டிபோட்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 23 லட்சம் பேர் !

இதில் இன்னும் வேடிக்கையான விஷயம் ( அல்லது வேதனையான விஷயம்) என்னவென்றால், விண்ணப்பித்தவர்களில் பலர் பட்டதாரிகள். சிலர் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்கள் கூட !

விண்ணப்பித்த அனைவரையும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து நேர்காணல் நடத்த வேண்டுமென்றால், அது நடந்து முடிய நான்காண்டுகள் ஆகும் என்று உத்தரப்பிரதேச அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அதுவும் ஒரு நாளைக்கு 2,000 பேர்களை நேர்காணல் செய்தால்!

Published by

Leave a comment