பெஷாவர்: பாகிஸ்தானின் வட மேற்கிலுள்ள பெஷாவர் நகரின் விமானப்படைத் தளமொன்றில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் படையினர் பதினேழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இராணுவம் கூறுகிறது. அதில் பதினாறு பேர் அத்தளத்தில் இருந்த பள்ளிவாசல் ஒன்றில் விடியற்காலை நேரத் தொழுகையில் இருந்தவர்களாவர்.
இவர்களைத் தாண்டி ஆயுததாரிகள் மீது எதிர்த்தாக்குதலை வழிநடத்திய படையணித் தலைவரும் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலில் வேறு இருபது பேரும் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களில் பதிமூன்று பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றாலும் சண்டைகள் நீடிப்பதாக இராணுவம் சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.
படைத்தளத்திற்கு உண்டான சீருடையை அணிந்து, காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவி ஆயுததாரிகள் படைத் தளத்துக்குள் நுழைந்திருந்தனர் என்று அவர் கூறினார். ஆயுததாரிகள் இரண்டு குழுவாய் பிரிந்து, ஒரு குழு பள்ளிவாசலையும் மற்றொன்று காவலறையையும் தாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
இத்தாக்குதலைத் தாமே நடத்தியுள்ளதாகக் கூறியுள்ள தாலிபான், தமது தரப்பில் ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளது.
Published by


Leave a comment