அநுராதபுரம்: உணவகம் ஒன்றை நடாத்திச் செல்லும் சாக்கில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுர பிரிவு போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரான உணவக உரிமையாளரிடம் 165 கஞ்சா பைக்கற்றுகள் கைப்பற்றப்பட்டதோடு, குறித்த பைக்கற்றுகள் அடங்கிய பொதி மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த உணவகத்தின் கூரைப் பகுதியிலிருந்து விற்பனைக்காக வெளியே எடுக்கப்பட்ட போதே அவர் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பைக்கெற்று ஒன்றை ரூபா 100 இற்று விற்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Published by
![kanja[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2015/09/kanja1.jpg?w=150&h=113)
![kanja[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2015/09/kanja1.jpg?w=600&h=450)
Leave a comment