Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • நிலத்தில் வீழ்த்தப்பட்ட சிரியாவின் அகதித் தந்தையையும் இரு பிள்ளைகளையும் ஆரத்தழுவி அரவணைத்தார் மனித நேயமிக்க கிறிஸ்டியானோ ரொனால்டோ

    – MJ மெட்ரிட்: மனித நேயம் நிலத்தில் வீழ்த்தப்பட்டாலும், அதனை உயர்த்தும் மானிடர்களும் உலகெங்கிலும் இருந்து வருகின்றனர். கடந்தவாரம் சிரியாவிலிருந்து தனது இரு பிள்ளைகளுடன் ஐரோப்பாவிற்குள் அகதிகளாக நுழைய முற்பட்டபோது, ஹங்கேரி பொலிஸாரின் கெடுபிடிக்குள் சிக்குண்டு அகதிகள் அங்குமிங்கும் ஓடினர்.

  • இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்ச்சி

    கொழும்பு: இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்ச்சியடைந்துள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையும். இந்த நிலைமைக்கு தீர்வு காணப்படாவிட்டால் அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடையும். ஒன்பது மாத காலப்பகுதியில் இலங்கை ரூபாவின் பெறுமதி ஒப்பீட்டளவில் 7 முதல் 8 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளது.

  • துருக்கியில் மேலும் ஒரு குழந்தையின் உடல் கரை ஒதுங்கியது

    அங்காரா: சிரியாவை சேர்ந்த நான்கு வயது சிறுமியின் உடல் ஒன்று ஏஜியன் கடற்கரை ஓரமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக துருக்கியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அகதிகளை ஏற்றிக்கொண்டு, கிரேக்கத் தீவு ஒன்றை நோக்கிச் சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியிருப்பதாக துருக்கிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. பல குழந்தைகள் உட்பட 14 சிரிய நாட்டவர் காப்பாற்றப்பட்டுள்னர்.

  • குப்பைவாரியுடன் ஜனாதிபதி மைத்திரி

    கொழும்பு: கடற்கரை தூய்மைப்படுத்தும் சர்வதேச தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் கொழும்பு, காலி முகத்திடல் சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநாகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக, கொழும்பு மாநகர சபை மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில், மேல் மாகாணசபை முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோன்

  • கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தினால் தமிழ் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது – பிரதி அமைச்சர் ஹரீஸ்

    ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தினால் தமிழ் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. கல்முனை மண்ணில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதனை சீர்குலைக்க இடமளிக்க முடியாது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

  • இங்கிலாந்தில் இடம்பெறும் ரக்பி உலகக் கிண்ண ஆரம்ப நிகழ்வுகளின் படத்தொகுப்பு

  • ஐ.நா அறிக்கை கடினம் குறைந்ததற்கு நல்லாட்சியின் செயற்பாடுகளே காரணம்

    மஹிந்தவின் அரசு ஆட்சியிலிருந்திருந்தால் நாடு பாரிய விளைவுகளைச் சந்தித்திருக்கும் கொழும்பு: “ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் ஐ. நா. அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால் நாடும் மக்களும், இன்னும் சில முக்கியஸ்தர்களும் பாரதூரமான விளைவுகளை எதிர்கொண்டிருப்பார்கள்” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். ஐ. நா. அறிக்கையின் காரம் (கடினம்) குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டதற்கு இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளே காரணமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

  • 34,000 துப்பாக்கிகள் சட்டவிரோத விற்பனை வழக்கில் கோத்தபாய அடுத்த வாரம் கைது?

    AF- 90 கொழும்பு: 34,000 துப்பாக்கிகளை சட்டவிரோதமாக ரக்னா லங்கா என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்த வழக்கில் கோத்தபாய ராஜபக்ச அடுத்த வாரம் கைது செய்யப்படலாம் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ரக்னா லங்கா என்ற நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக 34,000 துப்பாக்கிகளை இலங்கையின் பாதுகாப்பு செயலராக இருந்த போது கோத்தபாய ராஜபக்ச வழங்கினார் என்பது குற்றச்சாட்டு.  இது தொடர்பான வழக்கில் 89 துப்பாக்கிகளைத்தான் அவர் சட்ட ரீதியாக கொடுத்தார் என்பது தெரியவந்தது.

  • தம்புள்ளை விவசாயிகளின் பரிதாப நிலை

    எம்.ஐ. அப்துல் நஸார் தம்புள்ளை: பெரிய வெங்காயத்தை விற்பனை செய்ய முடியாது தாம் நிர்க்கதி நிலைக்குள்ளாகி இருப்பதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பெரிய வெங்காயத்தை விற்பனை செய்வதற்காக வருகை தந்திருந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் இந்த நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

  • அமெரிக்காவின் நாயகன் அகமது முகமது

    AF-90 வாஷிங்டன்: அமெரிக்காவில் கடிகாரம் செய்ததற்காக பொலீசாரால் கைது செய்யப்பட்ட 14 வயது மாணவன் அகமது முகமது அமெரிக்காவின் ஹீரோவாக ஆகியுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள இர்விங் நகரைச் சேர்ந்தவர் அகமது முகமது(14).  அதே பகுதியில் உள்ள மெக்ஆர்தர் உயர் நிலைப்பாடசாலையில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தான் செய்த கடிகாரத்தை பள்ளிக்கு எடுத்துச் சென்றார்.

  • மற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை

    காலி: காலி, அக்மீமன ஜனபாலா பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அக்மீமன குருந்துவத்த பகுதில் உள்ள ஸ்ரீ சுமங்கல வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெமுனி பூஜானி என்ற 8 வயதுடைய சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

  • அடுத்த வருடம் தொடக்கம் மரண தண்டனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

    கொழும்பு: அடுத்த வருடம் தொடக்கம் மரண தண்டனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் அனுமதி கிடைத்தால் மரண தண்டனையை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி இன்று கூறுகையில்,

←Previous Page
1 … 321 322 323 324 325 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar