சிறுமி சேயா கொலை தொடர்பில் பாடசாலை மாணவன் கைது

child gambahaகம்பஹா: அண்மையில் கொட்டதெனியாவ பிரதேசத்தில் 4 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 17 வயதான பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

கொட்டதெனியாவ அங்கரங்கஹா பிரதேசத்தை சேர்ந்த 4 வயதான சேயா என்ற சிறுமி, கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவன், கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்ப நண்பர் எனவும் அவர் கம்பஹா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் வணிகப் பிரிவில் கல்வி கற்று வந்தவர் எனவும் புலனாய்வுப் பிரிவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் தனித்தனியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Published by

Leave a comment