Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஐ.எஸ். அமைப்பு மீது விரக்தி ஏன் ? – விலகிய தீவிரவாதிகள் மத்தியில் ஆய்வு

    லண்டன்: இஸ்லாமிய அரசு என்ற குழுவிலிருந்து விலகிய 60 தீவிரவாதிகளின் கருத்துக்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, அவர்கள் ஏன் அந்த அமைப்பு மீது விரக்தியடைந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. போராட்டக் குழுக்களிடையே நடக்கும் உள்மோதல்தான் இதற்கு ஒரு மிக முக்கிய காரணம் என்று லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி நடத்திய இந்த ஆய்வு காட்டுகிறது.

  • மட்டக்களப்பு மாநகர சபையில் மரநடுகை நிகழ்வு

    எம்.ஐ.அப்துல் நஸார் மட்டக்களப்பு: கடந்த வெள்ளிக்கிழமை (18) மட்டக்களப்பு மாநகர சபையில் மரநடுகை நிகழ்வொன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் உயர் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

  • வங்கி மூலமாகவே பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படல் வேண்டும் கட்டாரில் தீர்மானம்

    எம்ஐ.அப்துல் நஸார் கொழும்பு: கட்டார் நாட்டில் சேவையாற்றும் இலங்கையர்களின் சம்பளத்தினை நவம்பர் மாதம் தொடக்கம் வங்கி மூலமாக வழங்குவதை கட்டாயப்படுத்துவதற்கு  அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோறள அண்மையில் மத்திய கிழக்கிற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது அந்த நாட்டு அதிகாரிகளிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக அந்த நாட்டின் தொழில் மற்றும் நலன்புரி அமைச்சர் அப்துல்லா ஸாலியா அல் குலாபி இதனை தெரிவித்தார்.

  • புனித இடங்களில் 18,680 மெகாவட்ஸ் சக்திகொண்ட மின்சாரம்

    MJ மக்கா: புனித ஹஜ்ஜை முன்னிட்டு புனித ஆலயமான மஸ்ஜிதுல் ஹரம் மற்றும் ஹஜ்ஜிற்குரிய புனித இடங்களில் 18,680 MW (மெகாவட்ஸ்) சக்தி கொண்ட மின்சாரம் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளதாக சவுதி மின்சார நிறுவனத்தின் சிரேஷ்ட அலுவலர் சியாட் பின் அல் செய்ஹா தெரிவத்துள்ளார். இப்பாரிய திட்டத்தின் ஒரு பகுதி தந்பொழுது நிறைவடைந்திருப்பதாகவும், மற்றுமொரு பகுதி தொடர்வதாகவும் அல் செய்ஹா தெரிவிக்கிறார்.

  • நரம்புகள் பாதிப்பு நோய்களால் அல்லற்படும் மக்களுக்காக பிரபல வைத்தியர் ஹப்ஸா மஹாஸ் காத்தான்குடி விஜயம்

    புவி எம்.ஐ. ரஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த பிரபல நரம்பியல் டாக்டர். ஹப்ஸா மஹாஸ் (D.H.M, B.F.M, M.T) அவர்கள், நேற்று (20) காத்தான்குடிக்கு வருகை தந்துள்ளார். காத்தான்குடி கடற்கரை முகப்பு வீதியில் அமைந்துள்ள ‘சலாகா’ பாயிஸ் விருந்தினர் விடுதியில் தங்கியுள்ள டாக்டர் அவர்களிடம் நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவிக்கு வைத்திய சிகிச்சை பெற்றுப் பலனடைந்த நமதூர் சகோதரர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கமைய,

  • இலங்கையில் முதலாவது மின்சார ரயில் சேவை

    கொழும்பு: இலங்கையில் முதலாவது மின்சார ரயில் சேவை ஆரம்பித்தல் மற்றும் ரயில் பாதையை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மலேசியா நிறுவனம் ஒன்று அண்மையில் கைச்சாத்திட்டது. அதற்கமைய கொழும்பு கோட்டையில் இருந்து நீர்கொழும்பு வரை இலங்கையின் முதலாவது மின்சார ரயில் பாதை வலையமைப்பு நிர்மானிக்கப்படவுள்ளது.

  • இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டால்மியா காலமானார்

    கொல்கத்தா: இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியா தனது 75 ஆவது வயதில் கொல்கத்தாவில் ஞாயிறு மாலை காலமானார்.உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வியாழன் அன்று இரவு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். காலஞ்சென்ற டால்மியா, கடந்த 36 வருடங்களாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர் பதவிகளில் இருந்துள்ளார்.

  • குடியேறிகள் படகு விபத்தில் 13 பேர் பலி

    அங்காரா: குடியேறிகளை ஏற்றி வந்த டிங்கி இரப்பர் படகு ஒன்று இன்னுமொரு படகுடன் மோதியதில் குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளதாக துருக்கிய கரையோரப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளது.கிரேக்க தீவான லெஸ்பொஸை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்ட அந்தப் படகு துருக்கியின் கரைக்கு அப்பால் கனாக்கேல் துறைமுகத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது.

  • ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு முழு நிலவில் ஊடக உறவுகளின் ஒன்று கூடல்

    – எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி மீடியாபோரத்தின் ஏற்பாட்டில் ஊடக உறவுகளின் ஒன்று கூடல் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 26.09.2015 அன்று சனிக்கிழமை முழு நிலவில் காத்தான்குடியில் இடம் பெறவுள்ளதாக அதன் தலைவர் ஏ எல் டீன் பைறூஸ் தெரிவித்தார்.

  • கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறை

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூவின ஊடகவியலாளர்களுக்குமான ஒருநாள் பயிற்சிப் பட்டறை மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை ‘விடியல் ஸ்ரீலங்கா’ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றும் தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • ஹஜ் பாதுகாப்புக்கு ஒரு இலட்சம் படையினர்!

    MJ மக்கா: இவ்வருடம் இடம்பெறும் ஹஜ் கடமையின் பாதுகாப்புக்காக ஒரு இலட்சம் இராணுவத்தை சவுதி அரேபியா களமிறக்கியுள்ளதாக சவுதி அரேபிய உள்துறை பேச்சாளர் மாஜி. ஜென. அல் துர்கி தெரிவித்துள்ளார். ஹஜ் வணக்கம் எந்த தடையுமின்றி பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இடம்பெறும் நோக்கிலேயே வழமையை விடவும் இம்முறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக அல் துர்கி தெரிவிக்கிறார்.

  • இலங்கையில் இவ்வருடம் செப்டம்பர் வரையிலான காலப் பகுதிக்குள் 6500க்கும் அதிகமான சிறுவர் துஷ்பிரயோகப் புகார்கள்

    கொழும்பு: இலங்கையில் சிறார் மீதான துஷ்பிரயோகம் அதிகரித்துவருவது குறித்து நாட்டின் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளது. இந்த வருடம் செப்டம்பர் வரையிலான காலப் பகுதிக்குள் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பாக 6500க்கும் அதிகமான புகார்கள் கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது.

←Previous Page
1 … 320 321 322 323 324 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar