டுபாய்: பல திறமையான வீரர்களின் திறமைகள் சில பொழுதுகளில் பொருளாதார நெருக்கடிகளால் அப்படியே இலை, மறைகாயாய் மூடி மறைக்கப்பட்டுவிடுகின்றன. அப்படி தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கட்டை விட்டு தொழில் நிமித்தம் டுபாய் பயணம் ஆனவர்தான் ஏறாவூரைப்பிறப்பிடமாகக் கொண்ட 04 ஆகஸ்ட் 1992 இல் பிறந்த முஹம்மட் சியான்.
கடினபந்து, மென்பந்து விளையாட்டுக்களில் ஈடுபடும் உள்ளூர் வீரர்கள் எவரும் இவரை அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. சிறந்த பந்துவீச்சு, சிறந்த துடுப்பாட்டம் போன்றவற்றில் தனது தனித்துவமான திறமைகளை வெளிக்காட்டி பிரபலமான ஒரு வீரர்.
தொழில் நிமித்தம் வளைகுடா சென்றவரிற்கு கிரிக்கட்டே தொழிலாகவும் போய்விட்டது; இவரது திறமையால் அங்கும் GOURMET எனும் அணியில் இணைந்து கொண்டு தனது திறமைகளை உலகறியச்செய்து வருகின்றார்.
முழு டுபாயிலும் பெயர் சொல்லி அறியும் அளவிற்கு ஞனரஞ்சகமான வீரராக மாறி வருகின்றார். அண்மையில் நடைபெற்ற மிகப்பிரபலமான ANIB tournament இல் கூட இரண்டு போட்டிகளில் Man of the Match விருதினை வென்று இலங்கை மண்ணிற்கு பெறுமை ஈட்டித்தந்துள்ளார்.
இவ்வாற இளம் வீரர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைத்துக் கொடுக்கப்படவேண்டியது அனைவரினதும் பெறுப்பாகும்.
- அஹமத்


Leave a comment