கல்முனை புதிய நகர அபிவிருத்தி சம்பந்தமாக பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்துரையாடல்

  • ஹாசிப் யாஸீன்

hareesகல்முனை: கல்முனை புதிய நகர அபிவிருத்தி சம்பந்தமாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நேற்று (17) வியாழக்கிழமை கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான வீ.கலையரசன், எம்.இராஜேஸ்வரன், கல்முனை பிரதேச செயலாளர்களான எம்.எச்.எம்.கனி, எல்.லவநாதன், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உள்ளிட்ட கல்முனை மாநகர சபை தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், வட்ட விதாணைமார் என பலரும் கலந்து கொண்டனர்.

harees

இதன்போது கல்முனை புதிய நகர அபிவிருத்தி சம்பந்தமாக தமிழ் மக்கள் கொண்டிருந்த அதிருப்திக்கான காரணங்களை கேட்டறிந்து அதற்காக உத்தரவாதங்களை வழங்கியதோடு, இத்திட்டத்தினால் தமிழ் மக்கள் பாதிக்கப்படாதவாறு இரு சமூக மக்கள் பிரதிநிதிகளும் வெளிப்படையாக பேசி தீர்க்கமான முடிவுகளுக்கு எதிர்காலத்தில் வரவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

kalmunai

Published by

Leave a comment