Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • முல்லைத்தீவில் மீண்டும் ஆர்ப்பாட்டம்

    முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் வகையில் அங்கு மேற்கொள்ளப்படுகின்ற அத்துமீறிய காடழிப்பு, நில அபகரிப்பு, மீன்பிடிப்பிரதேசங்கள் அபகரிப்பு மற்றும் சட்டவிரோத முறையிலான மீன்பிடி முதலானவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த மக்களுக்கு நிரந்தர வீட்டு வசதிகள், தொழில் வாய்ப்புக்களை போன்றவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரியும், முல்லைத்தீவு அரச செயலகத்தின் எதிரில் புதனன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

  • நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுவது அவசியம் அவுஸ்திரேலியத் தூதுவர்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்துவது மற்றும் அதனோடு தொடர்பான குற்றச்செயல்களை முறியடிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு அந் நாட்டின் சார்பில் அதன் இலங்கை உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி, நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் நன்றி தெரிவித்தார்.

  • இலங்கையில் வறுமை மாவட்டமாக இனங்காணப்பட்டிருப்பது மாவட்ட மக்கள் உள்ளுர் உற்பத்தியில் செய்யும் அசட்டைப் போக்குத்தான் – மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கையில் வறுமை மாவட்டமாக இனங்காணப்பட்டிருப்பது மாவட்ட மக்கள் உள்ளுர் உற்பத்தியில் செய்யும் அசட்டைப் போக்குத்தான் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

  • மு. காவின் வரலாற்றில் முஸ்லிம் சமூகத்துக்காக இதுவரை அமைச்சுப்பதவியை தூக்கி வீசியதாக வரலாறு இல்லை- முபாறக் அப்துல் மஜீத்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஒரு காலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போது அன்றைய முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்வதன் மூலமே  முஸ்லிம்களின் தன்மானத்தை காக்க முடியும் என கூறிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினர் இன்று தாம் ராஜினாமா செய்வதன் மூலம் நன்மை கிடைக்குமா என கேட்பது இவர்களின் சயநல சிந்தனையையே காட்டுகிறது என  முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

  • த.தே.கூ தலைவர் திரு.சம்பந்தனின் உரை முஸ்லிம்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்- ஸ்ரீ லங்கா முஸ்லிம் மக்கள் கட்சி செயலாளர்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கை முஸ்லிம்கள் சமகாலத்தில் அனுபவிக்கும் துன்பங்களுக்கெதிராகவும் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் செயற்பட்ட பொப்புலர் பிரண்ட ஒப் இந்தியா, மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் உட்பட இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் பிரேரணையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் மக்கள் கட்சி நிறைவேற்றியுள்ளது.

  • ‘லோஹினி ரதிமோகனை இலங்கைக்கு அனுப்பக் கூடாது’

    ஐக்கிய நாடுகள் சபையின் அகதி அந்தஸ்து பெற்றிருக்கின்ற நிலையிலும், ஐக்கிய அரபு இராட்சியத்தில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ் செய்தியாளரான லோஹினி ரதிமோகன் அவர்கள் குறித்து எல்லைகளற்ற செய்தியாளர்களுக்கான அமைப்பான ஆர் எஸ் எஃப் கவலை வெளியிட்டுள்ளது.

  • ‘நல்லதோர் உள்ளம். பலமிக்கதோர் நாடு’ எனும் தொனிப்பொருளிலான சித்திரம், மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா

    – பழுளுல்லாஹ் பர்ஹான் அம்பாரை: பிரதம மந்திரி அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நல்லெண்ண மனப்பான்மைகளை விருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட ‘நல்லதோர் உள்ளம். பலமிக்கதோர் நாடு’ எனும் தொனிப்பொருளிலான சித்திரம், மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் அம்பாரை ஹாடி தொழிநுட்பக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

  • ஆடு நனைகின்றது….ஓநாய் அழுத கதை…..!!

    –  அபூ அஸ்ஜத் கொழும்பு: இலங்கையில் முஸ்லிம் வாழ்கின்றார்கள், அவர்களது உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதில் இன்று சகல தரப்பினரினதும் பார்வை நீண்டு சென்றுள்ளது. அண்மையக் காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத சிந்தனை மாற்றும் நேரடித் தாக்குதல்கள் ஓய்ந்தப்பாடில்லை.

  • ‘திவிநெகும ஊடாக நாட்டை கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப் பொருளில் காத்தான்குடியில் திவிநெகும விற்பனைச் சந்தை

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு இம்மாதம் 13, 14 ஆம் திகதி மலரவிருக்கும் தருணத்தில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக திவிநெகும சந்தை நாடு முழுவதும் இடம்பெற்று வருகின்றது.

  • ஓரு வடத்திற்கும் மேலாக திறக்கப்படாமலிருக்கும் காத்தான்குடி மீன்பிடி இறங்குதுறையின் எரிபொருள் நிரப்பு நிலையத்தை உடனடியாகத் திறக்குமாறு மீனவர்கள் வேண்டுகோள்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினால் மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன்பிடி இறங்குதுறையின் எரிபொருள் நிரப்பு நிலையம் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக திறக்கப்படாமல் துருப்பிடித்து அழிவடையும் நிலைக்கு மாறிக்கொண்டிருக்கின்றதாக கடற்றொழிலை  மேற்கொள்ளக்கூடிய அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

  • முல்லைத்தீவு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன: அமைச்சர் ரிஷாட்

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

  • ஆரையம்பதி – காத்தான்குடி எல்லைகள் தமிழ் முஸ்லிம் இரு சமூகங்களுக்கும் பாதிப்பில்லாமல் வரையறுக்கப்படல் வேண்டும்-பூ பிரசாந்தன்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி – காத்தான்குடி  பிரதேச எல்லை நிர்ணயம் தொடர்பாக வர்த்தமானியில் முறையாக குறிப்பிடப்பட்டு வரையறுக்கப்பட்டிருந்த போதும் இதுவரையும் நிருவாகங்கள் சீர்படுத்தப்படாமல் ஆரையம்பதி பிரதேச எல்லைக் கிராம நிருவாகங்களை காத்தான்குடி பிரதேச செயலகம்

←Previous Page
1 … 1,097 1,098 1,099 1,100 1,101 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar