த.தே.கூ தலைவர் திரு.சம்பந்தனின் உரை முஸ்லிம்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்- ஸ்ரீ லங்கா முஸ்லிம் மக்கள் கட்சி செயலாளர்

sampanthan– பழுளுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: இலங்கை முஸ்லிம்கள் சமகாலத்தில் அனுபவிக்கும் துன்பங்களுக்கெதிராகவும் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் செயற்பட்ட பொப்புலர் பிரண்ட ஒப் இந்தியா, மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் உட்பட இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் பிரேரணையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் மக்கள் கட்சி நிறைவேற்றியுள்ளது.

இது சம்பந்தமாக கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலாளர் பத்ருத்தீன் மௌலவி, உப தலைவர் அஸ்வர் பாக்கவி உட்பட உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது பிரேரணையை நிறைவேற்றி செயலாளர் பத்ருத்தீன் மௌலவி உரையாற்றும் போது தெரிவித்ததாவது,

 இலங்கை முஸ்லிம் சமுதாயம் தனது உரிமைகள் ஒவ்வொன்றையும் இழந்து பல துன்பங்களுக்கும் அச்சங்களுக்கும் முகம் கொடுக்கும் போது அதற்கெதிராக ஜனநாயக வரம்புகளுக்குள் நின்று ஒரு சிறிய ஆர்ப்பாட்டத்தையேனும் செய்ய முடியாத கேவலமான நிலையிலேயே எமது முஸ்லிம் கட்சிகள் உள்ளன. இந்த நிலையில் இந்தியாவின் பொப்புலர் பிரண்ட், மற்றும் தமிழ் நாடு. மு. மு. கழகம் என்பவை எமது நாட்டு முஸ்லிம்களுக்காக ஆதரவு தெரிவித்தமை பாராட்டுக்குரிய விடயமாகும். அதே போல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் அவர்களின் உரை வரலாற்றுச்சிறப்புமிக்கதாகும்.

இதன் மூலம் தமிழ் முஸ்லிம் உறவு வலுப்பெற்று வருவதை காண முடிகிறது. கிழக்கு மாகாண சபையில் தமிழ் கூட்டமைப்புக்கு முஸ்லிம்கள் காலை வாரிவிட்ட போதும் நமக்காக பேசுவார்கள் என நமது சமூகம் அனுப்பி வைத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகத்தை விற்றுப்பிழைக்கும் போதும் சம்பந்தன் அவர்களின் உரை ஓரளவு நிம்மதியை தருகிறது.

Published by

Leave a comment