காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினால் மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன்பிடி இறங்குதுறையின் எரிபொருள் நிரப்பு நிலையம் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக திறக்கப்படாமல் துருப்பிடித்து அழிவடையும் நிலைக்கு மாறிக்கொண்டிருக்கின்றதாக கடற்றொழிலை மேற்கொள்ளக்கூடிய அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய காத்தான்குடி பிர்தௌஸ் கடற்கரைப்பகுதியில் இபாட் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் கடற்றொழில் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ் எரிபொருள் நிரப்பு நிலையம் இவ்வாறு பாவனையில் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதால் துருப்பிடித்து அழிவடையும் நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதுவரையில் இவ் எரிபொருள் நிரப்பு நிலையம் திறக்கப்படாமலிருப்பதால் அப்பகுதி மீனவர்கள் தூர இடங்களுக்கு சென்று எரிபொருளை கொள்வனவு செய்து பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து இவ் எரிபொருள் நிரப்பு நிலையத்தை உடனடியாக பாவனைக்கு திறந்து தருமாரு கோரிக்கை விடுக்கின்றனர்.





Leave a comment