முல்லைத்தீவு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன: அமைச்சர் ரிஷாட்

mullaitivu– இர்ஷாட் ரஹ்மதுல்லா

முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுளமுனை மஹா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுக் கூட கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டும் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு பேசும் போது கூறியதாதவது –

mullaitivu

இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்னர் இப்பிரதேசம் இருந்த நியைலினை எங்களால் உணரமுடிகின்றது. பயங்கரவாத செயற்பாடுகளால் முல்லை மாவட்ட மக்கள் பெரும் அசௌகரியங்களை நாம் அறிவோம். நிம்மதியற்ற, அச்சம்நிறைந்த சூழலிலேயே வாழ்ந்து வந்தோம். இன்று இப்பிரதேசத்தின் அபிவிருத்திகளை நோக்குங்கள். நவீன பாதைகள் அமைக்கப்படுகின்றது. மின்சாரமற்ற கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்கின்றது. பாடசாலை கட்டிடங்கள் முதல் ஏனைய பொது நோக்கு மண்டபங்கள் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றன. இவைகளெல்லாம் இம்மாவட்ட மக்களினது மேம்பாடுகளுக்கு என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்ளவிரும்புகனின்றேன்.

mullaitivu (3)

வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையில் என்னிடம் சமர்ப்பிக்கப்படும் அனைத்து வேலைத் திட்டங்களுக்குமான அனுமதியினை வழங்கிவருகின்றேன்.அது தமிழர்களுக்கா, முஸ்லிம்களுக்கா என்று பார்ப்பதில்லை. ஏனெனில் மதவாதம், இனவாதம், பிரதேச வாதம் என்பன ஒரு போதும் ஆட்சி செலுத்தியதாக வரலாறுகள் இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்பகின்றேன்.

mullaitivu (2)

கற்ற சமூகத்திற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பழமொழிக்கொப்ப இம்மாவட்ட மாணவ சமூகம் கல்வித் துறையில் புதிய சாதனைகளை படைக்க வேண்டும். அதற்காக கல்விப் பணிப்பாளர் தலைமையில் ஆசிரியார்கள் பணியாற்றுகின்றனர்.அதற்கு சமாந்தரமாக பெற்றோர்களும் முழுமையான பங்களிப்பினை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

mullaitivu (4)

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், ஜனாதிபதியின் இணைப்பாளர் கணகரத்தினம் உட்பட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

Published by

Leave a comment