ஆரையம்பதி – காத்தான்குடி எல்லைகள் தமிழ் முஸ்லிம் இரு சமூகங்களுக்கும் பாதிப்பில்லாமல் வரையறுக்கப்படல் வேண்டும்-பூ பிரசாந்தன்

arayampathy_boundary– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி – காத்தான்குடி  பிரதேச எல்லை நிர்ணயம் தொடர்பாக வர்த்தமானியில் முறையாக குறிப்பிடப்பட்டு வரையறுக்கப்பட்டிருந்த போதும் இதுவரையும் நிருவாகங்கள் சீர்படுத்தப்படாமல் ஆரையம்பதி பிரதேச எல்லைக் கிராம நிருவாகங்களை காத்தான்குடி பிரதேச செயலகம் நிர்வகிக்க முற்படுவதும் அதனைத் தடுத்து நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளின் நிருவாக நடவடிக்கைகளை ஆரையம்பதி பிரதேச செயலகம், பிரதேச சபைகளிடம் நடைமுறைப்படுத்த வழங்கப்பட்டு வேன்டும் என கோரப் பட்டு வரும் நிலையில் ஆரையம்பதி – காத்தான்குடி எல்லையை மீள்நிர்ணயம் செய்ய முற்படுவதாகவும் இவ்வாறு மீள்நிர்ணயம் செய்யப்படும் போது ஆரையம்பதி பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவர் எனவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் த.ம.வி.க பொதுச்செயலாளருமான பூ.பிரசாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

prashanthan
பூ.பிரசாந்தன்

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. சார்ள்ஸுக்கும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும், கிழக்கு முன்னாள் முதல்வரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி. சந்திரகாந்தனுக்கும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு எல்லைகளை நிர்வகிக்க கோரி முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் த.ம.வி.க பொதுச்செயலாளருமான பூ. பிரசாந்தனினால் கடிதமொன்ரு எழுதப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

arayampathy_boundary

Published by

Leave a comment