‘திவிநெகும ஊடாக நாட்டை கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப் பொருளில் காத்தான்குடியில் திவிநெகும விற்பனைச் சந்தை

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு இம்மாதம் 13, 14 ஆம் திகதி மலரவிருக்கும் தருணத்தில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக திவிநெகும சந்தை நாடு முழுவதும் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைவாக ‘திவிநெகும ஊடாக நாட்டை கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப் பொருளில் மாபெரும் திவிநெகும விற்பனைச் சந்தை இன்று புதன்கிழமை காத்தான்குடியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கினால் புதிய காத்தான்குடி பதுறியா மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம். முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி தலைமையக முகாமையாளர்; ஈ.குணரட்ணம்,காத்தான்குடி பிரதேச உதவிப் பிரததேச செயலாளர் அஹமட் அப்கர், காத்தான்குடி பிரதேச உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கருணாகரன், சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையளர் எம்.ஏ.எம்.சுல்மி, சமுர்த்தி வங்கி முகாமையளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திவிநெகும பயனாளிகளின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும்,மலிவு விலையில் மக்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்து கொள்வதற்கும் நடாத்தப்படுகின்ற இவ்விற்பசைன் சந்தை இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment