மெத்தைப்பள்ளிவாயலின் ஜமாஅத்தார் பட்டியல் தயாரித்தல்-மர்சூக் அஹமட் லெப்பை

Al-Haj Marzook A. Lebbe President

பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ஒரு பள்ளிவாயலின் ஜமாஅத்தார் பட்டியல் என்பது ஒரு பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் இடாப்புக்குச் சமனானதாகும். இந்த ஜமாஅத்தார் பட்டியலில் உள்ளவர்களினால் தான் அப்பள்ளிவாயலின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பள்ளி ஜும்மாப் பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் மர்சூக் அஹமட் லெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்ரைகயில்,

கடந்த 09.05.213ம் திகதியுடன் மெத்தைப்பள்ளிவாயலின் நிருவாகக் காலம் முடிவடைந்திருந்த போதிலும் மேலும் ஆறு மாதங்களிற்கு நாங்கள் பள்ளிவாயலை நிருவகிக்க வக்பு சபையினால் உத்தியோகப்பற்றற்ற முறையில் அனுமதிக்கப்பட்டு இருந்தோம். காரணம் என்ன வென்றால் குட்வின் சந்தியில் உள்ள கட்டிடங்கள் நகர சபையினால் உடைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. அதனோடு சம்மந்தப்பட்ட சில பிணக்குகளை நகரசபையுடன் கலந்தாலோசித்து தீர்வு கண்டு அக் கடைத்தொகுதியைக் கட்ட வேண்டி இருந்தது. இதற்காகவே அவர்கள் ஆறு மாதம் நீடித்துத் தந்தார்கள்.

ஆனால் சென்ற றமழான் 27ம் கிழமை இரவு மெத்தைப்பள்ளியில் நடைபெற்ற அமளி துமளி காரணமாகவும் அதன் பிண்ணனியில் சில நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் இருந்ததன் காரணமாகவும் உடனடியாக நம்பிக்கையாளர் சபையை கலைத்து புதிய நம்பிக்கையாளர் சபையைத் தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் மெத்தைப்பள்ளிக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் ஜமாஅத்தார் பட்டியல் தயாரிக்கின்ற வேலை தற்போது மும்மூரமாக இடம் பெற்று வருகின்றது.

Published by

Leave a comment