மரணப்பிடியில் இலங்கை முஸ்லிம்கள்! தாக்கப்படப்போகும் 25வது பள்ளிவாயல் எது?

bothu-AK-42

கொழும்பு: பௌத்த கலகக் காரர்களின் பிடியில் சிக்குண்டு தவிக்கின்றது சுதந்திர இலங்கை. பல நூற்றாண்டுகளாக மூவினத்தவரும் ஒற்றுமையாக வாழ்ந்துவந்த புராதன இலங்கையில், பேரினவாதிகளின் துவேசங்கள் அரசியலில் கலந்து பல இலட்சம் உயிர்களையும் பல கோடி சொத்துக்களையும் கடந்த காலங்களில இழந்திருந்தது இலங்கை .

இன்று, முஸ்லிம்கள் மீதான கலகங்களால் ருசி மேல் ருசிகண்டிருக்கும் பௌத்த கலகக் காரர்கள் முஸ்லிம்களை பூரணமாக அழத்தொழிப்பதற்கு விடாப்பிடியாக நின்று வருகின்றனர். ஓர் மரணப்பிடியில் இலங்கை முஸ்லிம் சமூகம் திணரிக் கொண்டிருக்கின்றது.

இதன் தாற்பரியங்களை இலங்கை உலமாக்கள் மறைக்கலாம். இலங்கை முஸ்லிம் தலைவர்கள் மறைக்கலாம். ஆனால் உலக நாடுகள் இலங்கை முஸ்லிம்களின் இருப்புக்கான கேள்விக்குரிகளை இன்று தெளிவாகக் கோடிட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றன.

இவற்றுக்கெல்லாம் ஒன்றே ஒன்றைத்தான் நாங்கள் தெளிவாக சொல்ல முடியும். அதுதான் பலம் பொருந்திய அரசியல் பின்னணி.

இந்நாட்டில் ஓர் சமூகம் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் காடைத்தனங்களைக் கண்டிக்க முடியாமல் தொடர்ந்து விட்டுச் செல்வதையும், மாறாக முஸ்லிம்களின் புற முதுகில் தடவிச் செல்வதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.

தற்பொழுது பேரினவாதிகளால் தாக்குதல் நடாத்தப்படும் பள்ளிவாயல்கள் பல அரசாங்கத்தில் பதியப்பட்டதாக இருந்தும், அவற்றை எமது தலைவர்கள் அரசியல் இலாபத்துக்காக விட்டுக் கொடுத்து வருகிறார்கள்.

இதற்கு பௌத்த கலகக் காரர்கள் மிக கச்சிதமாக ஆராய்ந்து தாக்கப்படும் பள்ளிவாயல்களின் முன்னய வரலாற்றைத் தட்டிப்பார்க்க எத்தனிக்கின்றனர்.

தம்புள்ளைப் பள்ளிவாயல், மஹியங்கனைப் பள்ளிவாயல், அவர்கள் கச்சிதமாக காய் நகர்த்திய ஓர் வழிமுறை!

தம்புள்ளை பள்ளிவாயல், ஆரம்பத்தில் அங்கு பள்ளிவாயல் இருக்கவில்லையென்றும் சுமார் 30 வருடங்களுக்குள் ஓர் பௌத்த காணியில் உருவான இடமே இப்பள்ளிவாயல் எனவும், பௌத்த துறவிகள் வாதாடி வென்றுசென்ற வரலாறு!

இதே போல், மஹியங்கனை ஜூம்ஆ பள்ளிவாயல், இது ஓர் வியாபார நிறுவனம் என்றும், வியாபாரத்திற்காக தான் கடையை முஸ்லிம் ஒருவருக்கு வழங்கியதாக, குறித்த கடைக்குச் சொந்தமான பேரனவாத உரிமையாளர் சாட்சியம் அளித்திருந்தார்.

அது உண்மை என்பதை நிரூபித்து, தற்பொழுது குறித்த இடத்தில் வியாபாரம் செய்துவரும் சீனி முகம்மட் என்பவரும் இதனை உறுதிப்படுத்தினார்.

இறுதியில் ஓர் வியாபார நிலையம் எவ்வாறு பள்ளிவாயலாக மாறியது என்ற கேளிவியில் வழக்குத் தொடர முடியாமல் பள்ளிவாயல் இன்று அச்ச்தில் மூடப்பட்டிருக்கின்றது.

நாளை…..

இலங்கையில் முஸ்லிம்கள் வந்தேறு குடியேறிகள் என்றுதான் பேரினவாதிகள் கூறுகின்றனர். அதற்கான சான்றுகள் அவர்களிடம் இருக்கின்றது. சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் உள்ள இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை அவர்கள் தட்டிப்பார்த்தால், குறிப்பாக கொழும்பில் அமைந்துள்ள பள்ளிவாயல் காணிகள் பல, பொளத்தர்களின் காணி என்றும், பன்சாலை காணி என்றும் அவர்களுக்கு நிரூபிப்பதற்கு அவ்வளவு நேரம் போதாது.

இப்போதுதான் அவர்கள் ஆரம்பித்திருக்கின்றார்கள்.

‘பொறுத்திருங்கள் நாங்கள் இழக்கத்தான் போகிறோம்’ என கொழும்பின் பிரபல வர்த்தகர்கள் நேற்றைய விட்டுக் கொடுப்புச் சம்பவத்தின் பின்னர் கூறிவருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கலகக்காரர்கள் கால்வைத்த எந்தப் பேரணி இந்நாட்டில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது? அல்லது தோல்வியில் முடிந்துள்ளது? என்பதை மனச்சாட்சியுள்ள முஸ்லீம்கள் சிந்திக்க வேண்டும்.

இந்தக் கலகக் காரர்களின் பின்னணியில் பாரிய அரசியல் செல்வாக்குகள் இருந்து வருவது அப்பட்டமான உண்மை. இதை அறியாமல் நாங்கள் தொடர்ந்து அல்லாஹ்வின் இல்லங்களை இழந்து வருகிறோம்.

எங்களது சொந்தக் காணியில் ஒரு துரும்பையும் விட்டுவிட முடியாத நாங்கள் அல்லாஹ்வின் இல்லங்களை பேரினவாதிகள் கேட்டவுடன் விட்டுக்கொடுக்கும் அளவுக்கு எமது சமூகம் இலங்கையில் இருக்கிறது.

பொருத்திருங்கள். இன்னும் இழக்கப்போகிறோம். தற்பொழுது பேரினவாதக் குழுக்கள் முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றை தூசி தட்டிப்பார்க்கின்றனர்.

இலங்கையில் இதுவரை தாக்கப்பட்ட 24 பள்ளிவாயல்களுக்கும் எந்த இஸ்லாமிய அமைப்புக்களோ, முஸ்லிம் அமைச்சர்களோ எந்தவொரு கண்டணங்களையும் தெரிவிக்கவில்லை என்பது வேடிக்கையும், மனவேதனையும்.

இவர்கள் அனைவரும் எவ்வாறு விட்டுக்கொடுக்கலாம், எவ்வாறு பள்ளிவாயல்களை இழக்கலாம் என்பதற்காக மாத்திரமே அரச ஏஜண்டுகளாகக் கூடிக் கலைகிறார்களே தவிர, வேறு எத்தகை முடிவுகளை இச்சமூகத்திற்கு வழங்கி இருக்கிறார்கள் என்பதைக் கேட்கிறோம்.

இந்நாட்டில் தாக்கப்படப்போகும் இருபத்தைந்தாவது பள்ளிவாயல் எது என்பதும், பேரினவாதிகளால் எங்கள் கழுத்தில் கத்தி வைக்கப்படும் நாள் எது என்பதும் வெகு தூரத்தில் இல்லை!!!

Published by

Leave a comment