பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: மெத்தைப்பள்ளி வாயலின் மஹல்லா எல்லையானது பின்வரும் பள்ளிவாயல்களின் எல்லைகளை உள்ளடக்கிய பகுதிகளாகும். மெத்தைப்பள்ளி, ஹிழுறியா பள்ளி, குலபஉர்றாசிதீன் பள்ளி,கபுறடிப்பள்ளி, சுஹதாப்பள்ளியாகும்.
மெத்தைப்பள்ளியானது ஊரின் மிகப்பெரிய ஜும்மாப் பள்ளியாகவும் ஊரின் மத்தியிலும் இருக்கின்ற காரணத்தினால் இதன் ஜமாஅத்தார் எல்லையை வரையறுக்க முடியாது உள்ளது. மெத்தைப்பள்ளிக்கு வானமே எல்லை. ஏன் எனில் ஒரு பள்ளியில் ஏதாவது கிரிகையில் கலந்து கொள்பவர் அப்பள்ளிவாயலின் ஜமாஅத்தார் ஆவார் என்பது வக்பு சட்டம் கூறுகிறது. இதன் மூலம் ஒரு பள்ளிவாயலுக்கு அப்பள்ளிவாயலின் மஹல்லாவில் வசிப்பவர்கள் மாத்திரம் தான் ஜமாஅத்தார்கள் ஆக வருவார்கள் என கொள்ள முடியாது. ஒரு பள்ளிவாயலுக்கு அப்பள்ளி மாஹல்லா வாசிகள் எலலோரும் ஜமாஅத் ஆவார்கள். ஆனால் ஜமாஅத்தார்கள் எல்லோரும் அப்பள்ளிவாசலின் மஹல்லா வாசிகளாக இருக்கமாட்டார்கள்.
வக்பு சட்டம் எவ்வாறு இருப்பினும் மெத்தைப் பள்ளிவாயலக்கு ஒரு வழக்காறு ( யாப்பு ) உண்டு. அதாவது மெத்தைப் பள்ளிவாயல் மஹல்லாவில் வசிப்பவர்களும் மெத்தைப் பள்ளிவாயல் மஹல்லாவில் பிறந்தவர்களும் அப்பள்ளிவாயலின் ஜமாஅத் ஆவார்கள் என்று மிக நீண்ட காலமாக அந்த வழக்காறு இருந்து வருகின்றது. மெத்தைப் பள்ளி மஹல்லாவில் பிறந்தவர் மஹல்லாவிற்கு வெளியே எங்கு சென்று திருமணம் முடித்து இருந்தாலும் அவருக்கு மெத்தைப்பள்ளி ஜமாஅத்தாராக வருவதற்கு உரிமையுண்டு.
நான் அரிய 1970ஆம் ஆண்டுகளில் இருந்து மர்ஹும் ராசா ஹாஜியார் ( மர்ஹும் பாறுக் சின்னலெப்பையின் மாமனார் ) இவர் 5ஆம் குறிச்சியல் திருமணம் முடித்து இருந்தார். ஆனால் மெத்தைப்பள்ளியில் நம்பிக்கையாளராக இருந்தார் அது போல தற்போதைய அலியார் ஹசரத் அவர்கள் 4ஆம் குறிச்சியில் திருமணம் முடித்து இருக்கின்றார் ஆனால் அவர் மிக நீண்ட காலமாக மெத்தைப்பள்ளியில் நம்பிக்கையாளராக இருக்கின்றார். இது போல ஆர்.முகம்மது அதிபர், றபிக் ஹாஜியார், பௌமி போன்ரோரும் 4ஆம் 5 ஆம் குறிச்சிகளில் திருமணம் முடித்து இருந்தும் மெத்தைப்ள்ளி மஹல்லாவில் பிறந்தவர்கள் என்ற வகையில் இப்பள்ளிவாயலின் நம்பிக்கையாளராக இருக்கின்றார்கள். நான் ( மர்சூக் அகமட் லெப்பை ) நான் புதிய காத்தான்குடியில் திருமணம் முடித்து இருந்தும் மெத்தைப்ள்ளி மஹல்லாவில் பிறந்தவன் என்ற ரீதியில் இப்பள்ளியின் மிகப்பொறுப்புள்ள பதவியான தலைவர் பதவியில் இருக்கின்றேன்.
இந்த ரீதியில் தான் தற்போது ஜமாஅத்தார் பட்டியல் தயாரிக்கும் வேலைகள் நடைபெறுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவங்களை நாங்கள் நோன்பு காலத்தில் மஹல்லா குடும்ப அட்டையுடன் மக்களுக்கு விநியோகித்தோம் அது மாத்திரம் அல்லாமல் விண்ணப்பப்படிவங்களை பள்ளிவாயல் காரியங்களில் பொற்றுக் கொள்வதற்கும் வசதிகளை செய்து இருக்கின்றோம். சில நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் விண்ணப்பப் படிவங்களை வீடு வீடாகச் சென்று விநியோகித்து அவற்றை பூரணப்படுத்தி கையோடு எடுத்து வந்து பள்ளிவாயலில் சோர்க்கின்றார்கள். இவ் விண்ணப்பப்படிவம் கிடைக்கப் பெறாதவர்கள் பள்ளிவாயல் காரியாலயத்தில் பெற்றுக்கொள்ளுமாறு பள்ளிவாயல் ஒலி பொருக்கியிலே அடிக்கடி வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அதே போல கிளுரியா, குலபாஉர் ராசிதீன், கபுரடி, சுகதாப்பள்ளி வாயல்களின் ஒலிபொருக்கியிலும் அடிக்கடி அறிவித்தல் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரும்படி வேண்டுகிறோம். இப்பள்ளிவாயல்களின் விளம்பர பலகையிலும் இவ் அறிவித்தலை காட்சிப் படத்தி இருக்கின்றோம். மேலும் ஜமாஅத்தார் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் மாத்திரம் தான் மெத்தைப்பள்ளிவாயிலின் நம்பிக்கையாளர்களை தெரிவு செய்கின்ற பொதுச்சபைக் கூட்டத்திற்கு உங்களால் கலந்து கொள்ள முடியும் என்ற செய்தியையும் வலியுறுத்திக் கூறியிருக்கின்றோம். இவ் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கவேண்ய இறுதித்திகதி 16.08.2013 ஆகும். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 15.09.2013 திகதி ஞாயிறு காலை 9.00 மணிக்கு புதிய நம்பிக்கையாளர் சபைத் தெரிவிற்கான ஜமாஅத்தார் பொதுக்கூட்டம் இடம்பெற உள்ளது.
இவ்வளவு வெளிப்படைத் தன்மையாக ஜமாஅத்தார் பட்டியல் தயாரிக்கின்ற வேலைகள் இடம்பெற்று வரும் போது எங்களுடைய வயசான பேப்பர் மாமா ‘ முறை கேடான வகையில் மெத்தைப்பளியில் ஜமாஅத்தார் பட்டியில் தயாரிப்பு’ என்று செய்தி வெளியிடுகின்றார். பேப்பர் மாமா எப்போதும் ஒரு விடயத்தைப்ப பார்க்கும் போது மேசடி என்ற கண்ணாடியை அல்லது முறைகேடு என்ற கண்ணாடியைத் தான் போட்டுப் பார்ப்பார். அல்லது களவு என்ற கண்ணாடியை போட்டுப்பார்ப்பார். அவர் அணிகின்ற கண்ணாடியின் நிறத்தைத்தான் அவ்விடயமும் பிரதி பலிக்கும். பேப்பர் மாமாவுக்கு யாராவது நல்ல கண்ணாடி ஒன்று வாங்கிக் கொடுங்கப்பா.
நாங்கள் முறைகேடான முறையில் ஜமாஅத்தார் பட்டியல் தயாரிக்கின்றோம் என்ற தலைப்பின் கீழ் விவாதிக்க பேப்பர் மாமா ஆயத்தமாக இருந்தால் மெத்தைப்பள்ளியும் அவ்விவாதத்திற்கு ஆயத்தமாக இருக்கின்றது என்ற செய்தியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி
இப்படிக்கு
மர்சூக் அகமட் லெப்பை

Leave a comment