இந்தியாவின் சொந்தத் தயாரிப்பான விமானம் தாங்கி போர்க் கப்பல்

india ship-MJ

கொச்சி: இலங்கையில் யுத்தம் ஒழிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்தும்,  நாட்டைக் கட்டி எழுப்பாமல் பௌத்த தீவிரவாதிகளை வளர்த்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கு நெத்தியடியாய் இந்தியா மற்றுமொரு படிப்பினையை எடுத்துக்காட்டி இருக்கின்றது.

இந்தியா, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ரந்த் இன்று கொச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடற்படை திட்ட இயக்குனரகம் வடிவமைத்த விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ரந்தின் கட்டுமானப் பணி 2006 நவம்பரில் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கியது.

260 மீட்டர் நீளம் மற்றும் 60 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலின் எடை 37, 500டன். உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கிக் கப்பலின் முதல் கட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளது.

இதையடுத்து கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியின் மனைவி எலிசபெத் நேற்று  கொச்சி துறைமுகத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

வரும் 2016ல் கப்பலின் விரிவான சோதனை ஓட்டம் நடைபெறும்; 2018ம் ஆண்டில் கடற்படையில் சேர்க்கப்படும். மிக் – 29, காமோவ் – 31 மற்றும் இலகு ரக விமானங்கள் இந்த கப்பலில் இருந்து பறக்கவும், தரையிறங்கவும் முடியும்.ஐ.என்.எஸ். விக்ராந்த் மூலம், இதே போன்ற போர்க்கப்பல்கள் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வரிசையில், இந்தியாவும் இடம்பெறும்.

india ship

Published by

Leave a comment