Category: Your Kattankudy
-
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் ஏற்படக் கூடிய அபாயம்: கோத்தபாய எச்சரிக்கை !
கொழும்பு: நாட்டில் முஸ்லிம் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று கொழும்பில் பாதுகாப்பு தொடர்பாக இடம்பெற்ற கருத்தரங்கில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
-
சிரியாவினால் முடக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் இணையத்தளம்
டமஸ்கஸ்: சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் புரட்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். போர் நிறுத்தத்திற்காக உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன. இலட்சக்கணக்கான மக்களைப் பலி வாங்கியுள்ள இந்த சண்டையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதியன்று அரசு துருப்பு ரசாயன வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியதில் 426 குழந்தைகள் உட்பட 1429 பேர் பலியானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் பெண்களைக் கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியவர் சிறையில் ‘தற்கொலை’
ஒஹையோ: அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் மூன்று பெண்களைக் கடத்தி வைத்து , அவர்களைப் பாலியல் அடிமைகளாக சுமார் பத்தாண்டுகள் பயன்படுத்திய, ஏரியல் கேஸ்ட்ரோ என்பவர், அவர் சிறை வைக்கப்பட்டிருந்த அறையில் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அம்மாகாண சிறைத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
-
சிரியாவுக்கு எதிராக ஒருதலைப்பட்ச இராணுவ நடவடிக்கை கூடாது: ரஷ்ய அதிபர்
மொஸ்கோ: சிரியாவுக்கு எதிராக மேற்குலகம் ஒருதலைப்பட்சமாக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் சிரியாவின் அரசு தனது நாட்டு மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால்,
-
அமெரிக்காவின் கள்ளக் குழந்தை சவூதி அரேபியா!
– AF-90 ரியாத்: இஸ்ரேல்தான் அமெரிக்காவின் கள்ளக் குழந்தை என பள்ளிப்பருவம் முதல் இன்றுவரை எழுதப்படாத பாடமாக எங்கள் மனங்களில் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறோம். இஸ்ரேல் என்னதான் பலஸ்தீனத்தைத் தாக்கினாலும், காஸாவை அழித்தாலும் சவூதிக்கு எந்த அக்கரையும் இல்லை! உலக முஸ்லிம்களுக்கு மக்கா-மதீனா புனிதஸ்தளங்களில் பிரார்த்தனை புரிய வேண்டுமாயினும் மன்னரின் அனுமதி இமாமுக்குத் தேவை.
-
சிரியா அருகே நேற்று வந்து விழுந்த 2 ஏவுகணைகள்: அமெரிக்கா-இஸ்ரேலால் ஏவப்பட்டதாகும்: ரஷ்யா
– MJ, OiT டமஸ்கஸ்: சிரியா அருகே மத்திய தரைக் கடல் பகுதியில் நேற்று 2 பேலிஸ்டிக் வகை ஏவுகணைகள் வந்து விழுந்தன. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய ஏவுகணை பயிற்சியின்போது இவை ஏவப்பட்டுள்ளன. ஆனால், இது குறித்து இந்த இரு நாடுகளும் எந்த தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்தன. ஆனால், இந்த ஏவுகணைகள் வீசப்பட்டதை ரஷ்யா கண்டுபிடித்து வெளியுலகுக்கு சொன்னதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
அகதிகளை திருப்பி அனுப்புவதை இடை நிறுத்தியது சுவிஸ் அரசு
ஜெனிவா: இலங்கையில் இருந்து வந்து அகதித் தஞ்சம் கோரியுள்ளவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை சுவிட்சர்லாந்து இடை நிறுத்தி வைத்துள்ளது. அப்படி அனுப்பப்பட்ட இருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்கள் பயணித்த வாகனம் விபத்து!
இரசாத் ரஹ்மத்துல்லாஹ் மங்களஎலிய: வடமாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பளார் எம். அமீனின் ஆதரவாளர்கள் பயணித்த வாகனம் ஒன்று புத்தளம் மாவட்டத்தில் முந்தல் பொலீஸ் பிரிவில் மங்களஎலிய
-
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பு பிரிவு திறந்து வைப்பு
பளுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: நீதிமன்றங்களில் தமிழ் மொழி மூலம் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை ஆங்கிலம் அல்லது சிங்கள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பு பிரிவொன்றை பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ், நீதியமைச்ச
-
அதிகாரங்களைப் பயன்படுத்தி அமைத்த குழுவினர் அது தொடர்பான அறிக்கையை அமைச்சரிடம் கையளித்தனர்
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: நீதிமன்றங்களின் நியாயாதிக்க எல்லைகளை மீள் நிர்ணயம் செய்ததன் பின்னர் நாட்டின் சில பிரதேசங்களில் அதனால் பொதுமக்களுக்கும், வழக்காளிகளுக்கும், சட்டத்தரணிகளுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சீர்தூக்கிப் பார்த்து, அவற்றைப் பரிசீலித்து அவை தொடர்பான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக
-
அகில இலங்கை மக்கள் காங்ரசின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் புத்தளம் தில்லையடியில்
முகம்மட் சஜி புத்தளம்: ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஊடாக அகில இலங்கை மக்கள் காங்ரசில் போட்டில்யிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் புத்தளம் தில்லையடியில் இடம்பெற்றது. அமைச்சர் றிசாட் பதியுதீன், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட