Category: Your Kattankudy
-
ஆணாக இருந்து தன்னை பெண்ணாக மாற்றிக்கொண்ட பிரித்தானிய இராணுவப் பெண்ணின் இஸ்லாமிய நுழைவும், அனுபவமும்…
– MJ லண்டன்: இதுவரை காலமும் துப்பாக்கியுடனும், போர் எண்ணங்களுடனும், குடிபோதையிலும் இருந்து வந்த பிரித்தானிய இராணுவத்தின் ‘றோயல் குலஸ்சயர், பார்க்சயர் மற்றும் வில்சயர் மாநிலங்களுக்கான ரி.ஏ. ரெஜிமெண்ட்டின் பெண் இராணுவ வீரர் லூசி வெலண்டன் Lucy Vellender (28) புனித இஸ்லாத்தை அண்மையில் ஏற்றுக்கொண்டார்.
-
உங்களுக்கு விருப்பமா?
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா? தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி.
-
மின் சூரியனால் சுட்டுப் பொசுக்கும் லண்டனின் 37 மாடி கட்டிடம்!
– OiT லண்டன்: லண்டனில் கட்டப்பட்டு வரும் 37 அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று மக்களின் பெரும் துயரமாக மாறியுள்ளது. காரணம், இந்தக் கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜன்னல் கண்ணாடிகள் சூரிய வெளிச்சத்தை படு பிரகாசமாக பிரதிபலித்து மக்களுக்கு பெரும் இடையூறு செய்வதால் என்று கூறுகிறார்கள். குறித்த கட்டிடத்தால் அதிக சூரிய ஒளி தாக்குகிறது என மக்கள் முறைப்பாடு செய்திருக்கின்றனர்.
-
“புலிகளுக்கு அஞ்சலி செலுத்த திட்டமில்லை”
லண்டன்: ஐநா மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, சமீபத்தில் மேற்கொண்ட இலங்கை விஜயத்தின் போது, விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டிருந்தார் என்ற செய்திகள் “ திரிபுபடுத்தப்பட்டவை” என்று அவரது அலுவலகம் மறுத்திருக்கிறது.
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட தீடீர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…..
விசேட நிருபர்- இன்று பிற்பகல் பெய்த திடீர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகள் குறிப்பாக காத்தான்குடி, ஏறாவுர்,கிரான்,படுவாங்கரை போன்ற பல பகுதிகளின் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.
-
PPL 2013: இரண்டாவது லீக் சுற்றின் இறுதி போட்டி வெள்ளிக்கிழமை
– றிபாத். எல்.எம். காத்தான்குடி: பூநொச்சிமுனை விளையாட்டு கழகம், சியாத் பவுண்டேஷன் அனுசரணையுடன் நடாத்தும் ‘PPL 2013 Champions Cup T20′ 12வது லீக் சுற்றின் இறுதி போட்டி 2013.09.06 வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு காத்தான்குடி அணிக்கும், கல்முனை ஏஜ்ஸ்டீல் அணிக்கும் பூநொச்சிமுனை அல்இக்ரா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.
-
வாராந்த மார்க்க விளக்க வகுப்பு
காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாட்டில் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் பிரதி வியாழக்கிழமை தோறும் இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இரண்டாம் வாரமாக இன்று 05.09.2013இல் நடைபெறவுள்ள தொடரில் ‘இஸ்லாமிய அகீதாவும் அதன் வரையறைகளும்’ எனும் தலைப்பில் அஸ்செய்க் ஏ.ஜீ.எம். ஜலீல் (மதனி) அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார்.
-
அந்தக் காமுகர்கள் இவர்களே…
– OiT மும்பை: மும்பையில் ஆட்டோவில் தனியாக சென்ற இளம்பெண்ணிடம் பைக்கில் வந்த இருவர் மோசமாக நடந்து கொண்டுள்ளனர். மும்பை மலாத் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் (ஃபஷன் ஸ்டைலிஸ்ட்) ஓஷிவாராவில் உள்ள கடைத் தொகுதிக்கு கடந்த சனிக்கிழமை மாலை 5.30 ஆட்டோவில் தனியாக சென்றுள்ளார்.
-
சிரியாவுக்காக பிரார்த்தனை: போப் அழைப்பு
ரோம்: சிரியாவில் அமைதி நிலவ வேண்டும் என்று கோரும் ஒரு கவன்யீர்ப்பு நிகழ்ச்சிக்கு போப் பிரான்ஸிஸ் அழைப்பு விடுத்துள்ளார். ரோமில் தனது வாராந்திர உரையினை நிகழ்த்திய அவர், எதிர்வரும் சனிக்கிழமை இரவு நடைபெறவுள்ள ஒரு கவனயீர்ப்பு நிகழ்வில் கத்தோலிக்கர்கள் மற்றும் கத்தோலிக்கர் அல்லாதோர் பெருமளவில் திரள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கூட்டமைப்பு விஞ்ஞாபனத்தில் சதி!
எஸ்.றொசேரியன்லெம்பேட் கொழும்பு: தமிழத் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெட்கத்திற்குரியதும், கண்டனத்திற்குரியதுமாகும். பொறுப்பற்ற விதத்தில் மக்களிடம் அதிகாரத்தை மட்டும் கோருகிற உப்புச்சப்பற்ற தேர்தல் விஞ்ஞாபன
-
பல கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது காத்தான்குடி செய்ன் மௌலானா பள்ளிவாயல்
-டீன் பைரூஸ்- காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதி (பஸ் தரிப்படத்திற்கு முன்பாக) உள்ள அஷ் செய்யிது ஸெய்ன் மௌலானா பள்ளிவாயல் புதிய கட்டுமாணப் பணிக்காக வேண்டி உடைப்பதற்கான பணிகள் சென்ற வாரதிதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
-
அமெரிக்காவுக்கு எதிரான தலைவர்களை கொலை செய்ய நூதனத் திட்டம்
கொழும்பு: அமெரிக்காவிற்கு எதிரான தலைவர்களை கொலை செய்வதற்கு நூதனத் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் வசந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரச தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அமெரிக்கா அல்லது வேறு நாடுகளுக்கு விஜயம் செய்யும் போது அவர்களது உடலுக்குள் புற்று நோய் கிருமிகளை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.