மொஸ்கோ: சிரியாவுக்கு எதிராக மேற்குலகம் ஒருதலைப்பட்சமாக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் சிரியாவின் அரசு தனது நாட்டு மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால், ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் அதன் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், அப்போதும் ரஷ்யா நிச்சயம் எதிர்க்கும் என்று தான் கூறவில்லை என புடின் கூறினார்.
உலகின் முதல் இருபது பெரும் பொருளாதார நாடுகளின் சந்திப்பான ஜி-20 மாநாடு இந்த வாரம் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், சில ஊடகங்களுக்கு புடின் பேட்டி வழங்குகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஓரினச் சேர்க்கை பிரச்சாரம்
ரஷ்யாவின் சோச்சி நகரில் அடுத்த வருடம் பனிக்கால ஒலிம்பிக் நடக்கும்போது ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான பிரச்சாரமாகக் கருதப்படக்கூடிய அறிவிப்புகளை விளையாட்டு வீரர்களோ, ரசிகர்களோ செய்தால், ரஷ்யாவில் புதிதாக வந்துள்ள சர்ச்சைக்குரிய சட்டத்தின் கீழ் அவர்கள் தண்டிக்கப்படலாம் என கவலைகள் தெரிவிக்கப்படும் நிலையில், அது பற்றி அஞ்ச வேண்டாம் என அதிபர் புடின் கூறியுள்ளார்.
-BBC
Leave a comment