இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் ஏற்படக் கூடிய அபாயம்: கோத்தபாய எச்சரிக்கை !

gotaகொழும்பு: நாட்டில் முஸ்லிம் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று கொழும்பில் பாதுகாப்பு தொடர்பாக இடம்பெற்ற கருத்தரங்கில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து பாதுகாப்பு தரப்பினருக்கு புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் இலங்கையை மையமாகக் கொண்டு இயங்க முயற்சித்து வருவதாக தகவல் கிட்டியுள்ளது.

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்களை போராட்டங்களின் மூலம் அடிப்படைவாதிகளாக மாற்றும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன என தெரிவித்துள்ளார்.

மேலும், நோர்வே, பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் தீவிரமாக இலங்கைக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

gota

Published by

Leave a comment