ஆடு மேய்க்கும் ஓநாய்கள்

sheep– பிரகாசக்கவி

ஆடுகள் ஒருபோதும்
 குரைப்பதில்லை நாய்களைப் போல …

அதனால்தான்
 இன்றும் சில ஓநாய்களால்
 ஊளையிட்டுக்கொண்டே இருக்கமுடிகிறது
 வல்லரசு எனும் வல்லூருகலாய் !

புத்தனையும் காந்தியையும்
 நக்கி பார்க்காவிட்டால்
 அவைகளுக்கு தூக்கம் வருவதேயில்லை .

இடையன்களை   எல்லாம் புடையன்கள் போல
 கொத்தி கொத்தி கொல்லுவதில் தான்
 இவைகளுக்கு பேரானந்தம் .

ஏன் என்றால்

 அப்போதுதானே
 ஆடுகளை தின்று
 எண்ணெய் காடுகளையெல்லாம்  ஆளலாம் .

ஆனால் ஒன்றுமட்டும் இதுவரை
 ஓநாய்களுக்கு புரியவேயில்லை

 நரிகள் பதுங்குவது
 வீழ்வதற்கு அல்ல
 பாய்வதற்கு என்று !

sheep

Published by

Leave a comment