மங்களஎலிய: வடமாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பளார் எம். அமீனின் ஆதரவாளர்கள் பயணித்த வாகனம் ஒன்று புத்தளம் மாவட்டத்தில் முந்தல் பொலீஸ் பிரிவில் மங்களஎலிய பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவர்களில் ஒருவர் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இன்று மாலை புத்தளத்தில் இருந்து தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக அக்கறவெளி கிராமத்துக்கு வேட்பாளர் அமீனின் ஆதரவாளர்கள் பயணித்து உள்ளனர். அப்போது மங்களஎலிய பகுதியில் வைத்து வாகனம் மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போது எதிரே வந்த வாகனத்துடன் மோதியுள்ளது. அப்போது வாகனத்தில் இருந்த வேட்பாளர் அமீனின் உறவினரான மௌலவி சல்மான் இவ்விபத்தின் போது காயமுற்றதுடன், ஏனையவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியதாக முந்தல் பொலீஸார் தெரிவித்தனர்.
![18.-seattle-car-accident-lawyer-[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/03/18-seattle-car-accident-lawyer-1.jpg?w=150&h=61)
Leave a comment