Category: Your Kattankudy
-
சவூதி வழங்கிய பொது மன்னிப்புக் காலம் நிறைவு
ரியாத்: சட்டவிரோதமாக சவூதி அரேபியாவில் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. குறித்த பொது மன்னிப்புக் காலத்தில் 10,000 பேர் வரையில் இலங்கைக்கு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
-
தன் கனவு நனவாகும் சில மணித்தியாலங்களுக்குள் கொல்லப்பட்ட இலங்கை மாணவன்! இங்கிலாந்தில் பரிதாப சம்பவம்!!
– MJ செப்ஃபீல்ட்: பல பெற்றோர்களுக்கு இருக்கும் கனவுகள் போல்தான் தன் பிள்ளையை படித்து ஆளாக்க வேண்டும் எனும் அவாவுக்கமைய இலங்கையில் படிக்கவைத்து, பின்னர் இங்கிலாந்து பல்கலைக் கழகத்தில் ஓர் பட்டத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் நோக்கத்துடன் தனது மகனை அனுப்பிவைத்த பெற்றோர், தனது பிள்ளையின் சடலத்தைக் காண்பதற்கு தற்பொழுது இங்கிலாந்து, செப்ஃபீல்ட் நகருக்கு செல்லும் நிலை தோன்றி இருக்கின்றது.
-
வீசா ‘பிணைத் தொகை’ திட்டத்தை பிரிட்டன் கைவிடுகிறது
இங்கிலாந்து: வீசா விதிமுறைகளை அதிகளவில் மீறும் அபாயத்திற்குரிய நாட்டவர்கள் என்று வகைப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனுக்கு வருவதாக இருந்தால் அவர்களிடமிருந்து பிணைத் தொகை ஒன்றை செலுத்துமாறு கோருவதற்கு பிரிட்டன் குடிவரவுத்துறை அதிகாரிகள் போட்டிருந்தத் திட்டத்தை கைவிடவுள்ளாக பிரிட்டனின் அரச தலைமைச் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
நானாட்டான் பிரதேசத்திற்கு விஜயம் செய்த வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் ‘மேட்டுத் தீவு’ அரச காணி விவகாரம் தொடர்பில் ஆராய்வு
PMGG ஊடகப்பிரிவு நானாட்டான்: நானாட்டான், பொண்தீவுக்கண்டல் மற்றும் பூவரசங்குளம் கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட இரு கிராமங்களுக்குக்கும் மத்தியில் அமைந்திருக்கின்ற ‘மேட்டுத் தீவு’ அரச காணி விவகாரத்தில் தற்போது இரு கிராம மக்களிடையே முறுகல் நிலைகள் தோன்றியுள்ளன.
-
மரணச் செய்தியை பள்ளிவாயல்களில்அறிவிக்கலாமா?
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்கள் குழு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு. அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)இ ஆதாரம்: புஹாரீ 7352
-
அமெரிக்காவை பழிவாங்குவோம்: தலிபான்
– SHM நியுயோர்க்: ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் தங்கள் தலைவரைக் கொன்ற அமெரிக்காவை பழி வாங்குவோம் என மிரட்டல் விடுத்துள்ளது பாகிஸ்தான் தாலிபன் இயக்கம். பாகிஸ்தானின் பழங்குடியின பகுதியான வடக்கு வசிரிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹக்கீமுல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டார்.
-
ஆளில்லா வேவு விமானங்களும் அதன் கச்சிதமான தாக்குதல்களும்…
– MJ செய்மதி!! அறியாதவர்கள் இருக்க முடியாது. எம்மைப் பொருத்தமட்டில் கடற்கரையில் இரவுவேளைகளில் நண்பனின் மடியில் படுத்துக்கொண்டு, ஆகாயத்தில் நட்சத்திரங்களுக்குள் நகர்ந்து செல்லும் மின் பூச்சிகள் போன்ற செய்மதிகளை அல்லது விமானங்களை பார்த்து இரசித்துவிட்டு, இரவுக் கனவுகளை தொடரும் ஓர் அறிவு!
-
சஹாரா பாலைவனத்தில் தாயையும் சகோதரிகளையும் பலிகொடுத்த சிறுமி
சஹாரா: சஹாரா பாலைவனத்தை கடக்க முயன்றபோது தண்ணீர் தாகத்தால் பெருமளவானோர் பலியான சம்பவத்திலிருந்து உயிர்தப்பிய சிறுமி ஒருத்தி தங்களின் கொடூரமான பாலைவனப் பயணத்தை பிபிசியிடம் விபரித்துள்ளார். தனது தாயையும் இரண்டு சகோதரிகளையும் அவள் பாலைவனத்துக்கு பலிகொடுத்துள்ளாள். இவர்கள் செப்டெம்பரின் கடைசி அல்லது அக்டோபரின் முற்பகுதியில் நைஜரின் ஆர்லீட் நகரிலிருந்து பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
-
‘பிரதேச வாதத்திற்கு இடமில்லை’ – ஹக்கீம் : ‘மக்கள் தனக்களித்த ஆணையை மீறமாட்டேன்’ – சிராஸ்
கல்முனை: கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹிப் தொடர்ந்தும் பதவி வகிக்க முடியாதெனவும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கல்முனை மாநகர மு.கா. உறுப்பினர்கள் எவராவது சிராஸ¤க்கு ஒத்துழைப்பு வழங்கினால் அவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் படுமெனவும் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அதிரடியாக அறிவித்துள்ள நிலையில் தான் தொடர்ந்தும் பதவி வகிக்கப் போவதாக சிராஸ் மீராசாஹிப் சூளுரைத்துள்ளார்.
-
தாலிபன் தலைவர் கொலை: பாகிஸ்தான் கோபத்துடன் கருத்து
பாகிஸ்தான்: பாகிஸ்தானிய தாலிபன் இயக்கத் தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சூத் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டமை தொடர்பில் பாகிஸ்தான் அரசு கடுங்கோபத்துடன் கருத்து வெளியிட்டுள்ளது. தாலிபன் இயக்கத்துடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை
-
இலவச அப்பியாசக் கொப்பி வழங்கும் நிகழ்வு
KCC Media Unit காத்தான்குடி: இலவச அப்பியாசக் கொப்பி வழங்கும் நிகழ்வு காத்தான்குடி மத்திய கல்லூரி சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் மூலம் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்காக இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் கப்டன் ULA. முபாறக் தலைமையில் 01.11.2013 இன்று கல்லூரியின் பரீட் மண்டபத்தில் நடைபெற்றது.
-
சிறி ரெலோ கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் செந்தூரன் தீபாவளி வாழ்த்து
யாழ்ப்பாணம்: ஒளி வீசுகின்ற தீபாவளித் திருநாள் இந்நாளில் மட்டுமல்லாது எந்நாளும் தமிழர்களின் இல்லங்களின் ஒளி வீசுவதாக அமைய வேண்டுமென சிறி ரெலோ கட்சியின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.செந்தூரன் தீபாவளித் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து உள்ளார்.