Category: Your Kattankudy
-
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கு அமைச்சர் ரிஷாட் விஜயம்
– பொன்தீவு கண்டல் கிராமத்தில் இருந்து இர்ஷாத் றஹ்மததுல்லா மன்னார்: மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் பொன்தீவு கண்டல் கிராமத்தில் முஸ்லிம்களுக்கென மு்னெடுக்கப்பட்டுவந்த இந்திய வீடமைப்பு திட்டம் பிரதேச செயலாளரினால் தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டது தொடர்பில் ஆராயும் வகையில் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையிலான மக்கள் பிரதி நிதிகள் குழுவினர் நேற்று மாலை (2013.11.04) அங்கு சென்றனர்.
-
ஒசாமாவை காட்டிக்கொடுத்ததாக சன்மானம் கோரும் அமெரிக்கர்
நியுயோர்க்: கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடனை காட்டிக்கொடுத்ததாக கூறி அமெரிக்க நாட்டவர் ஒருவர் அதற்கான 25 மில்லியன் டொலர் சன்மானத்தை கோரியுள்ளார். அமெரிக்காவின் மிசிகன் மாநிலத்தைச் சேர்ந்த 63 வயதான டொம் லீ என்பவரே ஒசாமாவின் தலைக்கு நிர்ணயிக்கப்பட்ட மேற்படி தொகைக்கு உரிமை கோரியுள்ளார்.
-
‘சிப்தொர’ புலமைப்பரிசில் வழங்கும் மன்னார் மாவட்டத்திற்கான நிகழ்வு
மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: வறுமையினால் பாதிப்படைந்த குடும்பங்களின் மாணவர் கல்வி மேம்பாட்டிற்காக சமுர்த்தி உணவு முத்திரை பெறுகின்ற குடும்பங்களில் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பங்களிப்பு செய்கின்ற குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 233 மாணவர்களுக்கு சமுர்த்தி ‘சிப்தொர’ புலமைப்பரிசில் வழங்கும் மன்னார் மாவட்டத்திற்கான
-
ஸ்ரீ .ல.மு. மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கருத்தரங்கு
பழுளுல்லாஹ் பர்ஹான் சிலாபம்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கருத்தரங்கு சிலாபம், கொட்டாரருமுல்லை அல் – ஹிரா மகா வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை (02) இடம்பெற்றது.
-
வட மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் அவர்களின் முஹர்ரம் செய்தி
PMGG ஊடகப்பிரிவு இன்றைய சூழ்நிலையில் இந்த தேசமும், முஸ்லிம் சமூகமும் ‘வினைத்திறனுடன் சிந்திக்கின்ற, தூரநோக்குடன் விடயங்களை அணுகுகின்ற மக்களின் நன்மைக்காக அர்ப்பணத்துடன் உழைக்கின்ற’ ஒரு அணியினரின் அவசியத்தை எதிர்பார்த்து நிற்கின்றது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு சார்பிலான
-
மாணவ கலாசார பேரணியின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி
கொழும்பு: பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள 53 நாடுகளின் கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலை மாணவர்களுடைய பேரணியின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
-
அதிவேக வீதியில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம்
கொழும்பு: அதிவேக வீதிகளில் வாகனங்களை செலுத்தும் பஸ், வேன் சாரதிகளுக்கான விசேட வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதென மோட்டார் வாகன ஆணையாளர் எஸ். ஹரிஸ்சந்திர தெரிவித்தார். கண்டி வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கண்டி பிரதேச சாரதி பயிற்சி நிறுவன உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோரை தெளிவுபடுத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-
அமெரிக்க இராணுவ கொடூரங்களுக்கு துணைபோன மருத்துவர்கள்
வாஷிங்டன்: அமெரிக்க இராணுவத்தின் கட்டளைகளை ஏற்று பணியாற்றுகின்ற மருத்துவ நிபுணர்கள், பயங்கரவாத சந்தேகநபர்களை கொடூரமாகவும் இழிவாகவும் நடத்தியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. தேசிய பாதுகாப்பின் பேரில், மருத்துவ ஒழுக்கநெறிகளை மீறிச் செயற்படுமாறு அமெரிக்க இராணுவத்தினரும் புலனாய்வு நிறுவனங்களும் மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
-
சவூதியில் சட்டவிரோத பணியாளர்களுக்கு எதிரான தேடுதல் ஆரம்பம்
ரியாத்: சட்டவிரோத வெளிநாட்டுப் பணியாளர்களையும், அவர்களை வேலைக்கு அமர்த்தியிருப்பவர்களையும் தேடும் நடவடிக்கையை நாடெங்கும் பாதுகாப்புப் படையினர் இன்று ஆரம்பிக்கவிருப்பதாக சவுதி அரசாங்கம் கூறியுள்ளது. புதிய வேலைவாய்ப்புச் சட்டம் ஒன்று வந்ததை அடுத்து அமலுக்கு வந்த ஒரு வெளிநாட்டு பணியாளர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
-
காங்கேயனோடை பிரதேச 50 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான காசோலை வழங்கும் நிகழ்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காங்கேயனோடை: மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட காங்கேயனோடை பிரதேச வறிய மக்களுக்கு இலங்கை நீர்வழங்கள் சபையினால் வழங்கப்படும் குடிநீரினை இலவசமாகப் பெற்றுக்கொள்வதற்கான காசோலை வழங்கும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காங்கேயனோடை அல்-அக்ஸா மண்டபத்தில் பிரதேச அபிவிருத்தக் குழுவின் தலைவர் முகம்மட் முஜாகித் தலைமையில் இடம்பெற்றது.
-
சவூதியில் இரு இடங்களில் கடந்த 12மாத காலப்பகுதிக்குள் 810பேர் புனித இஸ்லாத்தை தழுவிக் கொண்டுள்ளனர்
– பழுளுல்லாஹ் பர்ஹான் யன்பு: சவூதி அரேபிய நாட்டில் யன்பு இன்டஸ்ரியல் பகுதியில் வேலை செய்யும் பல நாடுகளை சேர்ந்தவர்களில் இஸ்லாமிய மாத கணிப்பீட்டின் படி முஹர்ரம் மாதத்திலிருந்து துல்ஹஜ் கடைசிவரை அதாவது கடந்த 12 மாத காலப்பகுதிக்குள் 335 பேர் புனித இஸ்லாத்தை தழுவியுள்ளதாக யன்பு அஸ்ஸினாய்யா தஃவா நிலையத்தின் பல மொழிகளுக்குமான ஒருங்கிணைப்பாளர் உமர்லெப்பை ஹபீபுர்ர்ரஹ்மான் தெரிவித்தார்.
-
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் முதலாவது விபத்து
கொழும்பு: கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று பகல் 1.50 மணியளவில் இந்தச் சம்ப வம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பதிவான முதலாவது விபத்திச் சம்பவம் இதுவாகும்.