Category: Your Kattankudy
-
விஷேட தேவையுள்ள எனக்கு – சுயதொழில் ஆரம்பிக்க உதவுங்கள்
அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு, இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.. நான் றஸான். 1991 ஆம் ஆண்டு எனது வீட்டுக்கு அண்மையில் ஏற்பட்ட ஒரு கார் குண்டுவெடிப்பின் தாக்கத்தால் கருவறையிலேயே பாதிக்கப்பட்ட நான், (இறைவன் நாட்டப்படி) பிறக்கும்போதே அங்கவீனமுற்றே பிறந்தேன். எனது உடல் ஊனம் காரணமாக சமூகத்தின் பல கேலி கிண்டல்களுக்கு ஆளாகியபோதும் சரியான மூளை வளர்ச்சியைக் கொண்டிருந்த நான், இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க விருப்பமின்றி – பல சிரமங்களுக்கும் மத்தியில் பாடசாலை செல்ல ஆரம்பித்தேன்.
-
காத்தான்குடி அரசியல் களத்தில் மற்றுமொரு பலிக்கடா!
– AK-48 காத்தான்குடி: வாரஉரைகல் பிரதம ஆசிரியர் புவி ரஹ்மதுல்லாஹ் இன்று காலை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். இவ்விடயம் ஊரில் ஆரம்பத்தில் இன்று பரபரப்பாக பேசப்பட்டாலும், உத்தியோகபூர்வமற்ற செய்தியாக நான்கு சுவர்களுக்குள் பின்னர் மறைக்கப்பட்டுப் போனதொரு விடயமாக மக்கள் மத்தியில் திரிபுபடுத்தப்பட்டிருக்கின்றது.
-
புத்தாக்கப் போட்டியும் விஞ்ஞானக் கண்காட்சியும் ஆரம்பித்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா மகளிர் உயர்தர பாடசாலை விஞ்ஞான கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஞ்ஞான புத்தாக்கக் போட்டியும் அதற்கான கண்காட்சியும் 31-10-2013 இன்று வியாழக்கிழமை காலை கல்லூரியின் பௌதிக மற்றும் இரசாயனவியல் ஆய்வு கூடங்களில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வும் கௌரவிப்பு நிகழ்வும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வு 31-10-2012 இன்று வியாழக்கிழமை வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் மெத்தைப்பள்ளி வித்தியாலய அதிபர் எஸ்.எல்.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கல்வி அமைச்சினால் வழங்கப்படும் 2013 ஜனாதிபதி பிரதீபா பிரபா தேசிய விருது பெற்ற காத்தான்குடி அஷ்-ஷூஹதா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சி.எம்.பதுறுதீன்
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வழங்கியுள்ள “மக்கள் சந்திப்பு”
– பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் முதல்வர் பாவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான ஒரு வார கால அவகாசத்தினைஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வழங்கியுள்ள நிலையில் இராஜினாமா செய்வது தொடர்பாக மக்களின் கருத்துக்களை கேட்டறியும் “மக்கள் சந்திப்பு” சாய்ந்தமருது “லீ மெரிடியன்” வரவேற்பு மண்டபத்தில் நேற்று (31.10.2013) இரவு நடைபெற்றது.
-
முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை வடக்கில் மீளக் குடியமர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்
கொழும்பு: இலங்கையின் வடபகுதியில் இருந்து விடுதலைப்புலிகளினால், பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை அங்கு மீளக் குடியமர்த்துமாறு அரசாங்கத்தைக் கோரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது. இன்று மாலை கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் ஒன்று கூடிய அரசாங்க ஆதரவுக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி உட்பட மற்றும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
-
சஹாரா பாலைவனத்தைக் கடக்கமுயன்ற 87 பேர் சடலங்களாக மீட்பு
சஹாரா: நைஜரில் சஹாரா பாலைவனத்தை கடக்க முயன்றபோது, இடைநடுவில் வாகனம் பழுதடைந்த காரணத்தால் குடிக்க நீரின்றி தாகத்தால் உயிரிழந்த 87 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக நைஜரிலுள்ள மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர். சடலங்கள் பாலைவன ஓநாய்களால் குதறப்பட்டு, அழுகி உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதாக மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
-
பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுக்கு நல்ல நண்பர்களாக திகழ வேண்டும் -சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் நந்த மல்லவாராச்சி
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுக்கு நல்ல நண்பர்களாக திகழ வேண்டும் என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் நந்த மல்லவாராச்சி தெரிவித்தார். குறித்த அமைச்சின் செயலாளராக பதவியேற்று முதற்தடவையாக நேற்று புதன்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த போது கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஏனைய பொலிஸாருக்கும் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி அஷ்ஷுஹதா வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் எட்டுப் பேர் சித்தி
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அஷ்ஷுஹதா வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் பாத்திமா நிஹாதா170, பர்ஹத் நஹா166, அப்துர் ரஹ்மான்165, பாத்திமா நிஸ்மா161, பாத்திமா சுஹா156, நிஸ்பாக் அஹமட்156, முஹம்மட் ஸம்ஹான்155, அஹமட்155 ஆகிய சித்தியடைந்த மாணவ மாணவிகளையும்
-
கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து மட்டக்களப்புக்கு 364 ரூபாய் சாதாரண கட்டணத்தில் இ.போ.ச. பஸ் சேவை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து சாதாரண கட்டணத்தில் சேவையில் ஈடுபடும் கொழும்பு-காத்தான்குடி பஸ் சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்துமாறு இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலைய முகாமையாளர் அஜித் பெரேரா தெரிவித்தார்.
-
அன்வர் நகர் பாலர் பாடசாலையின் 5வது வருடாந்த விளையாட்டு விழா
– பழுளுல்லாஹ் பர்ஹான் புதிய காத்தான்குடி: புதிய காத்தான்குடி அன்வர் நகர் பாலர் பாடசாலையின் 5வது வருடாந்த விளையாட்டு விழா கடந்த 27 ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலய மைதானத்தில் அன்வர் நகர் பாலர் பாடசாலையின் அதிபர் எம்.எல்.ஏ.முகைதீன் தலைமையில் நடைபெற்றது.
-
விருந்தினர் விடுதிக்கான அடிக்கல் கிண்ணியா நகரபிதா தலைமையில்
– ரைஸ் கிண்ணியா: உலக வங்கியின் நிதி உதவியினூடாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் புற நெகும வேலைத்திட்டத்தினுடாக கிண்ணியா நகரசபை முன்னெடுக்கும் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஒன்றான கிண்ணியா விருந்தினர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று மாலை நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் பழைய ஆஸ்பத்திரி காணியில் இடம்பெற்றது.