இலவச அப்பியாசக் கொப்பி வழங்கும் நிகழ்வு

DSCF6640KCC Media Unit

காத்தான்குடி: இலவச அப்பியாசக் கொப்பி வழங்கும் நிகழ்வு காத்தான்குடி மத்திய கல்லூரி சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் மூலம் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்காக இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் கப்டன் ULA. முபாறக் தலைமையில் 01.11.2013 இன்று கல்லூரியின் பரீட் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புழ்ழாஹ் MA, MP அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான இலவச அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்தார். அத்துடன் கௌரவ மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் சிப்லி பாறூக் அவர்களும் கல்லூரியின் பிரதி அதிபர்கள் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். 

This slideshow requires JavaScript.

 

Published by

Leave a comment