யாழ்ப்பாணம்: ஒளி வீசுகின்ற தீபாவளித் திருநாள் இந்நாளில் மட்டுமல்லாது எந்நாளும் தமிழர்களின் இல்லங்களின் ஒளி வீசுவதாக அமைய வேண்டுமென சிறி ரெலோ கட்சியின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.செந்தூரன் தீபாவளித் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து உள்ளார்.
இவரது வாழ்த்துச் செய்தி வருமாறு:-
– பல தசாப்த காலங்களுக்கு பின் எம் உறவுகள் ஒற்றுமையாக கை கோர்த்து நிற்கின்ற இத்தருணத்தில்இ வடக்கு மக்களுக்கு தலைத் தீபாவளியாக பிறந்திருக்கின்ற இத்தீபாவளி நன்நாளில் இருந்தாவதுஇ எமது மக்களின் வாழ்வு சுபீட்சமானதாக அமைய வேண்டும்.
எமது மண்ணில் வலி.வடக்கு போன்ற பல பிரதேசங்களில் இன்று வரை மீள்குடியேற்றம் செய்யப்படாமல் நிர்க்கதியாக நிற்கின்ற எம் உறவுகள் எதிர்காலத்தில் ஆவது சொந்த மண்ணில் பண்டிகைகளை கொண்டாட இந்த தலைத் தீபாவளி வழி உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
இன்றைய அரசு யாழ். குடாநாட்டில் ஐனநாயகம் நிலவுவதாக கூறி வந்தாலும் மக்கள் மத்தியில் உருவாகி இருக்கின்ற அச்ச சூழலை நீக்க இத்தீபாவளி திருநாளில் ஆவன செய்ய வேண்டும்.
எது எவ்வாறு இருப்பினும்இ இனி வரும் காலங்கள் எம் உறவுகளின் அபிலாஷைகளையும், உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கின்ற காலங்களாக உருவாக இத்தீபாவளித் திருநாள் அமைய வேண்டுமென இறைவனை வேண்டுகின்றேன்.
உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.-
Leave a comment