ரியாத்: சட்டவிரோதமாக சவூதி அரேபியாவில் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. குறித்த பொது மன்னிப்புக் காலத்தில் 10,000 பேர் வரையில் இலங்கைக்கு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தக் காலப் பகுதியில் சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் 16,000 பேர் என தூதுவராலயத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 4000 பேரை சவூதி அரேபியாவால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் இலங்கைக்கு அழைத்துவர முடியாது போயுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் சவூதி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை இலங்கைக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
Leave a comment