அமெரிக்காவை பழிவாங்குவோம்: தலிபான்

– SHM

hakimullah_mehsudநியுயோர்க்: ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் தங்கள் தலைவரைக் கொன்ற அமெரிக்காவை பழி வாங்குவோம் என மிரட்டல் விடுத்துள்ளது பாகிஸ்தான் தாலிபன் இயக்கம். பாகிஸ்தானின் பழங்குடியின பகுதியான வடக்கு வசிரிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹக்கீமுல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டார்.

அவனுடன் அப்துல்லா,  தாரிக் மெஹ்சூத் மற்றும் ஹக்கீமுல்லா மெஹ்சூத்தின் மெய்காப்பாளன் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலால் பாகிஸ்தான் தாலிபன்கள் கோபம் அடைந்துள்ளதாக தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக தலைவனைக் கொன்ற அமெரிக்காவைப் பழி வாங்குவோம் என அறிவித்துள்ளது அவ்வியக்கம்.

இது குறித்து வடக்கு வசிரிஸ்தான் தலிபான் கமாண்டர் அபு ஓமர் கூறியதாக நியுயோர்க்  டைம்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, 

‘முன்னெப்போதும் இல்லாத வகையில் எங்கள் பழிவாங்கும் நடவடிக்கை இருக்கும். ஆளில்லா விமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு முழு உடந்தையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். எங்கள் எதிரியை எங்களுக்கு நன்றாகத் தெரியும்’ எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், தலைவன் கொல்லப் பட்டு விட்டதால் இனி, அடுத்த தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்தும் அவர்கள் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

Published by

Leave a comment