கொழும்பு: சவூதி அரேபியாவில் தங்கியுள்ள எந்தவொரு இலங்கையரும் கைதாகவில் லையென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அங்குள்ளவர்களை விடுவிப்பது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான அவசிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.
1300 இலங்கையர் வரை சவூதி அரேபியாவில் சட்ட விரோதமாக உள்ளனர். அவர்கள் தற்போது பாதுகாப்பு தடுப்பு முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேவையான சகல வசதிகளும் அவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் மங்கள ரன்தெனிய தெரிவித்தார். அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் திலான் பெரேரா அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இவ்விடயமாக தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாகவும் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.
Leave a comment