Category: Your Kattankudy
-
கடும் எதிர்ப்புகளையும் மீறி இலங்கைக்குப் புறப்பட்டார் சல்மான் குர்ஷித்
– SHM டெல்லி: தமிழக சட்டசபையில் காமன்வெல்த் மாநாட்டை முற்றிலுமாக இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், சற்றும் அதுகுறித்து அலட்டிக் கொள்ளவில்லை மத்திய அரசு. தான் திட்டமிட்டபடி இலங்கைக்குப் போவதாகவும், காமன்வெல்த் மாநாட்டின் நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொள்ளப் போவதாகவும் கூறியிருந்த வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று காலை கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.
-
குறுகிய காலத்துக்குள் நாடு கண்டிருக்கின்ற வளர்ச்சியை முழு சர்வதேசமும் பார்க்க வேண்டும்- பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி- இல்மி அஹமட் லெவ்வை
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொதுநலவாய நாடுகளின் மகாநாடு நமது இலங்கைத் திருநாட்டில் நடைபெறுவது நாட்டுமக்கள் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியனை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிவதற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் முதல்வர் இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.
-
பொதுநலவாய பிரதிநிதிகள் இன்று மட்டக்களப்பு விஜயம்
மட்டக்களப்பு: பொதுநலவாய மாநாட்டு பிரதிநிதிகளில் ஒரு குழுவினர் இன்று புதன்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளனர். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசேட விமானம் மூலம் மட்டக்களப்பு விமான நிலையத்தை வந்தடையும் குழுவினர் அங்கு வரவேற்கப்பட்டு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள முதியோர் பூங்காவுக்கு அழைத்து வரப்படுவர்.
-
நாளை முதல் 19ஆம் திகதி வரை அரசாங்க கட்டிடங்களில் தேசிய கொடியை பறக்கவிட அரசாங்கம் வேண்டுகோள்
கொழும்பு: இலங்கையில் நடைபெறும் 23 ஆவது பொதுநல வாய அரச தலைவர்கள் மாநாட்டையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி ஏற்பின் 4 ஆவது வருட நிறைவு விழாவையும் முன்னிட்டு நாளை (14) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நாடு பூராவுமுள்ள சகல அரச நிறுவனங்களின் கட்டிடங்களில் தேசிய கொடியேற்றுமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரியுள்ளது.
-
பொதுநலவாய சாசனம் மகாராணியின் கையெழுத்துடன் நேற்று வெளியீடு
கொழும்பு: 2013ம் ஆண்டுக்கான பொது நலவாய சாசனம் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது. பொதுநலவாய அமைப்பின் கெளரவ தலைவி இரண்டாவது எலிசபெத் மகாராணியின் கையொப்பத்துடன் இந்த அதிகாரபூர்வ பத்திரம் நேற்று வெளியிடப்பட்டது.
-
எழுதுகோல்….!
– காத்தான்குடி முபா பேனாவுக்கு உயிர் உண்டு என்கிறேன் நான்… பேனா… உலகின் அபார கண்டுபிடிப்பு… இறைவனின் அருட்கொடை…
-
கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய நபரை நாடு கடத்த பிரிட்டன் நடவடிக்கை
லண்டன்: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை இலங்கைக்கு நாடு கடத்த பிரித்தானியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
-
இரத்தினக் கல் கண்காட்சி நாளை ஆரம்பம்
கொழும்பு: பொது நலவாய அரச தலைவர்களின் மாநாட்டுக்கு இணைவாக இரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகைகளின் கண்காட்சி யொன்று நாளை 13 ஆம் திகதி முற்பகல் 11.00 மணிக்கு கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெறும்.
-
கென்னடியின் உயிரைக் குடித்த விசித்திரமான மர்ம ‘தோட்டா’: வெளிவராத புதிய தகவல்கள்
– SHM நியூயோர்க்: சுடப்பட்ட கென்னடிக்கு சிகிச்சை அளித்த தாதிகளில் ஒருவர், கென்னடியின் மரணம் குறித்தான புதிய தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அதில் கென்னடியின் கழுத்தில் பாய்ந்திருந்த துப்பாக்கிக் குண்டு ஒன்று மிகவும் விசித்திரமாக இருந்ததாக புதிய தகவலை தெரிவித்துள்ளார் அவர்.
-
காமன்வெல்த் மாநாடு: மொரிஷியஸ் பிரதமர் செல்லமாட்டார்
லண்டன்: இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் செல்லமாட்டார் என்று அந்த நாடு அறிவித்துள்ளது. இலங்கை, மனித உரிமைகளை மதிக்கும் விஷயத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று பிரதமர் ராம்கூலம் மொரிஷியஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
-
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் 2013 வருடாந்த பரிசளிப்பு விழா
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் 2013ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை சுவாமிநடராஜனந்தா ஞாபகார்த்த மண்டபத்தில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் கே.மனோராஜ் தலைமையில் நடைபெற்றது.
-
அந் நஜாத் பாலர் பாடசாலை விளையாட்டு போட்டி
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா கலந்து கொண்ட அந் நஜாத் பாலர் பாடசாலை சின்னஞ் சிறார்களின் விளையாட்டுப் போட்டி நேற்று கச்சக்கொடுத்தீவு அந் நஜாத் பாலர் பாடசாலையில் கோலாகலமாக நடைபெற்றது. பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.