கொழும்பு: பொதுநலவாய அரச தலைவர்கள் மகாநாடு நாளை (15) காலை கொழும்பு தாமரை தடாக மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கலையரங்கத்தில் வைபவரீதியாக ஆரம்பமாகும். 53 பொதுநலவாய அங்கத்துவ நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் கோலாகலமாக இடம்பெறும்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இம்மகாநாட்டின் தற்போதைய தலைமைத்துவத்தை அவுஸ்திரேலியா வகிக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி அபேட்டிடமிருந்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இனி வரும் இரண்டு ஆண்டுகளுக்கான தலைமைத்துவம் கிடைக்கும்.
இந்த பொதுநலவாய 22 ஆவது அரச தலைவர்கள் மகாநாடு ஆசிய நாடொன்;றில் 24 வருடங்களுக்கு பிறகு நடைபெறுகிறது
நாளைய மாநாட்டில் பொதுநலவாய நாட்டு மக்களின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி உள்ளடங்களாக சகல அபிலாஷைகள் சம்பந்தமாக
ஆராயப்படுவதுடன் அவர்களது எதிர்கால நடவடிக்கைகள் பற்றி பேச்சு வார்த்தை நடாத்தப்படும்.
இந்த மகாநாட்டில் பல முக்கிய விடயங்கள் ஆராயப்படவுள்ளதாக இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
சிறிய நாடுகள் முகங்கொடுக்கும் பிரச்சனைகள்- சவால்கள் சம்பந்தமாக பரந்தளவில் ஆராயப்படுவதுடன் அவற்றை வெற்றி கொள்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் கவனம் செலுத்தப்படும்.
இந்த மகாநாட்டில் முக்கிய விடயங்களாக சர்வதேச சமாதானம்- பாதுகாப்பு- ஜனநாயகம்- நல்லாட்சி- நிலையான அபிவிருத்தி- கடன் முகாமைத்துவம்- கல்வி- சுற்றாடல்- ஆண் பெண் சமத்துவம்- சுகாதாரம்- மனித உரிமைகள்- தகவல் மற்றும் தொடர்பாடல்- தொழில்நுட்பம்- நீதி- இரு தரப்பு வர்த்தக முரண்பாடுகள்- இசிறிய நாடுகள் மற்றும் இளைஞர் விவகாரம் என்பன முக்கிய இடம் பிடிக்கும்.
பொதுநலவாய அரச தலைவர்கள் மகாநாடு நாளை தாமரை தடாக மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கலையரங்கத்தில் வைபவ ரீதியாக ஆரம்பமானபின்னர் அவர்களது முதற்கட்ட நடவடிக்கைக்காக கொழும்பு சிறிமாவோ பண்டாரநாய்க்க ஞாபகார்த்த சரவதேச மகாநாட்டு மண்டபத்திற்கு
வருகை தருவார்கள்.
மாலையில் அத்தலைவர்கள் அங்கு இளம் தலைவர்களை சநதித்து உரையாடுவதெற்கென ஒன்று கூடுவர். பொதுநலவாய அரச தலைவர்கள் தாம் எடுத்த தீர்மானங்கள் சம்பந்தமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17) தமது இறுதி அறிக்கையை வெளியிடுவர். lk
Leave a comment