மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் மற்றும் வியட்நாம் தூதுவர் டொன் சிங் தங் இற்கும் இடையிலான சந்திப்பு

???????????????????????????????பழுளுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி, உற்பத்தி,கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கும் இலங்கையில் உள்ள வியட்நாம் தூதுவர் டொன் சிங் தங் இற்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை 14.11.2013 கொழும்பில் உள்ள வியட்நாம் தூதுவராயலத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது அமைச்சரோடு அமைச்சின் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் ஞானசேகரம், அமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் சமந்த அபேவிக்கிரம,வியட்நாம் தூதரக பொருளாதார அபிவிருத்திக்கான உதவி ஆலோசகர் பங் ட்ரொங் துவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்ததாவது,

கிழக்கு மாகாண சபையால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி முன்னெடுப்புகள் மக்களின் வாழ்வாதார உதவிகள், வறுமை ஒழிப்பு, சிறு கைத்தொழில் அபிவிருத்தி, விவசாயம், கால்நடை, மீன்பிடி, சுற்றுலாத்துறை தொடர்பாக அமைச்சின் கீழுள்ள வேலைத்திட்டங்களை தெளிவு படுத்தி கூறியதோடு எதிர்காலத்தில் வியட்நாம் தனது தொழில்நுட்ப உதவிகளையும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு தனியார் துறையின் பங்களிப்பு முக்கியம் எனவும் இதற்கு வியட்நாம் உதவவேண்டுமெனவும் தூதுவரிடம் கேட்டுக் கொண்டதொடு விரைவில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யுமாறும் தூதுவரிடம் அழைப்பு விடுத்தார்.

DSC_0164

மேலும் வியட்நாம் நாட்டின் வளர்ச்சியும், அபிவிருத்தியும் யதார்த்தபூர்வமாக தன்னிறைவு அடைந்து வருகின்றமையும் இதன் மூலம் இலங்கையில் இது வரைக்கும் முழு இடங்களிலும் அபிவருத்திப் பணிக்காக உதவியுள்ள போதிலும், குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் தனது அபிவிருத்திக்கான முன்னெடுப்புக்களை விரிவுபடுத்த வேண்டும் எனவும் அமைச்சர் இக்கலந்துரையாடலின் போது முன்வைத்தார்.

ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் முடிவில் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள முதலீட்டுத் திட்டங்களின் மும்மொழிவுகளையும் வியட்நாம் தூதுவரிடம் கையளித்தார். விரைவில் திட்டங்களை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்வேன் என்று அமைச்சரிடமும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அமைச்சு அதிகாரிகளிடமும் வியட்நாம் தூதுவர் உறுதியளித்ததோடு மிகக்கூடிய விரைவில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சரிடம் அவர் தெரிவித்தார்.

???????????????????????????????

அத்துடன் அடுத்த கிழமை அமைச்சின் செயலாளர், அமைச்சின் அதிகாரிகள் உட்பட வியட்நாம் நாட்டின் உயர்வர்த்தக அதிகாரிகளுடனான முக்கிய சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்; வியட்நாம் தூதுவர் தெரிவித்தார்.

Published by

Leave a comment