Category: Your Kattankudy
-
சீன பிரதானிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு!
கொழும்பு: சீன இராணுவத்தின் பொது ஊழியர்களின் பிரதிப் பிரதானி லெப்டினன் ஜெனரல் வான்ங் குயன்ங்யோன்ங் தலைமையிலான இராணுவ அதிகாரிகள் குழுவினர் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் .கோத்தாபய ராஜபக்ஷவை அவரது அமைச்சில் சந்தித்து உரையாடினர்.
-
‘பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய வரவு செலவு திட்டம்’ – அமைச்சர் பௌசி
கொழும்பு: பல அபிருத்திகளை உள்ளடக்கியதாக – ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றியமைக்கும் திட்டங்களையுடையதாக- வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்க வேண்டிய திட்டங்களையுடையதாக இம்முறை வரவு செலவு திட்டம் அமைந்துள்ளதென நகர அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.எம் பெளசி தெரிவித்துள்ளார்.
-
‘பட்டிப்பளை பிரதேச செயலரை அச்சுறுத்திய பிக்கு’ – பொலிஸில் புகார்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பௌத்த பிக்குவொருவர் பிரதேச செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்ததோடு, அலுவலக உடமைகளையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளதாக காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
-
இலங்கை – பாகிஸ்தான் பொருளாதார அபிவிருத்தி ஆணைக்குழுவின் 11 வது அமர்வு இன்று கொழும்பில்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கை – பாகிஸ்தான் பொருளாதார அபிவிருத்தி ஆணைக்குழுவின் 11 வது அமர்வு இன்று கொழும்பு கிறிஸ்பரி ஹோட்டலின் மண்டபத்தில் இடம் பெற்றது.இலங்கைக்கும்-பாகிஸ்தனுக்கும் இடையில் உள்ள வர்த்தக மற்றும் ஏனைய ஒத்துழைப்புக்கள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம் பெற்றன.
-
41 வது வயதில் தடம் பதிக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன்
வாழுகின்ற போது தான் சமூகத்திற்கு என்ன செய்தான் என்பதை நம் மூத்தோர்களும், புத்தி ஜீவிகளும் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையாகும். இந்த வார்த்தைகளை உண்மைப்படுத்த முயற்சிக்கும் போது எத்தனையோ இடர்களையும், தடங்களையும் நாம் பார்க்கின்றோம்.சிலர் இந்த தடைகளைக் கண்டு ஏன் நமக்கு இந்த வம்பு என்று எண்ணி மீண்டும் தமது சுலநல வாழ்வுக்குள் செல்கின்றனர்.
-
காத்தான்குடி கடற்கரையில் சூறாவளி கடல் கொந்தளிப்பு – ஒருவர் வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி – 1 மில்லியன் ரூபாய் இழப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு-காத்தான்குடி வங்காள விரிகுடா கடற்கரை ஏத்துக்கால் மற்றும் நதியா பீச் பகுதிகளில் இன்று புதன்கிழமை அதிகாலை சுமார் 1.30. ஒரு மணி முப்பது நிமிடமளவில் தீடிரேன ஏற்பட்ட கடுமையான சூறாவளி கடல் கொந்தளிப்பு அனர்த்தத்தால் கடலில் இருந்து 50 மீட்டருக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 படகுகளும்;
-
பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டின் பேரில் 1718 பேர் கைது!
கொழும்பு: பெண்களை 2005 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றத்திற்காக 1718 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2005 இலிருந்து இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 2008 இல் 319 ஆக அதிகரித்துள்ளது. பின்னர் 2012 இல் எண்ணிக்கை குறைந்து 252 பேர் கைதாகியுள்ளனர்.
-
ஸ்ரீதரன் எம்.பியின் உரைக்கு சபையில் கடும் ஆட்சேபம்
கொழும்பு: புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சுதந்திர போராளியாக சித்தரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் நேற்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு ஆளும் தரப்பு எம்.பிக்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
-
மிஸ்வாக் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டமும் பல் வைத்திய உண்மைகளும் – (தொடர் 9)
ஆசிர் சென்ற கட்டுரைத் தொடரில் பிறர்பாவித்த மிஸ்வாக்கை உபயோகிப்பது பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தையும் வாய்த்துர்வாடைக்கான காரணத்தையும் அதன் நோயியற் தன்மையும் பற்றிய ஆய்வைப் பார்த்தோம்.அல்ஹம்துலில்லாஹ்.
-
வடிகான் அமைப்புக்கான அடிக்கல் நகரபிதா ஹில்மி மஹ்ரூபினால் ஆரம்பித்து வைப்பு
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபைக்குட்பட்ட ஹிஜ்ரா வீதியிலிருந்து மாஞ்சோலை நோக்கி செல்லும் 600 மீற்றர் நீளமான வீதியில் மாழை காலங்களில் நீர் வடிந்து செல்வதற்கான வடிகான் அமைப்புப் பணிகளுக்கான ஆரம்பகட்ட கட்டுமான பணிகள் அடிக்கல் நாட்டும் நிகழ்வு கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ருப் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
மலாலாவுக்கு மற்றுமொரு சர்வதேச விருது
பிரசில்லா: பாகிஸ்தானில் தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய பாடசாலை சிறுமி மலாலா யூசுப்சாய்க்கு சமத்துவம் மற்றும் பாகுபாடு இன்மைக்கான சர்வதேச விருதை வழங்கவுள்ளதாக மெக்சிக்கோ அறிவித்துள்ளது. மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு மலாலா யூசுப் சாய் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக மெக்சிக்கோ கூறியுள்ளது.
-
பாகிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை அணி: மஹேல, ஹேரத் நீக்கம்!
கொழும்பு: பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணியில் மஹேல ஜயவர்தன கலந்துகொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளுக்கான இலங்கை குழாமில் சூழற்பந்துவீச்சாளர் ரங்ஹன ஹேரத்தும் இணைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.