கிண்ணியா: கிண்ணியா நகரசபைக்குட்பட்ட ஹிஜ்ரா வீதியிலிருந்து மாஞ்சோலை நோக்கி செல்லும் 600 மீற்றர் நீளமான வீதியில் மாழை காலங்களில் நீர் வடிந்து செல்வதற்கான வடிகான் அமைப்புப் பணிகளுக்கான ஆரம்பகட்ட கட்டுமான பணிகள் அடிக்கல் நாட்டும் நிகழ்வு கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ருப் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
57 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள வடிகானுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ருப் முதலில் அடிக்கல் நாட்டிவைக்க அதனைத் தொடர்ந்து கிண்ணியா நகரசபை உறுப்பினர் பாஜில் குத்தூஸ், நகரசபை பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஜம்சித் இஸ்மாயில் ஆகியோரும் அடிக்கல் நாட்டிவைத்தனர்.
இதன்போது நகரசபை உத்தியோகத்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர். மிக நீண்ட காலமாக மழை காலங்களில் அதிகமாக மழை நீர் தேங்கி நின்று போக்குவரத்து மற்றும் சகலவிதமான அன்றாட நடவடிக்கைகள் பெருமளவு ஸ்தம்பிதமடையும் நிலை காணப்பட்டதோடு வெள்ளம் ஏற்படும் இடமாக மாஞ்சோலைப் பிரதேசம் காணப்படுவதனால் இந்த வடிகான் அமைப்பு மக்களுக்கு பெரிதும் நன்மை பயக்கக்கூடியதாக உள்ளதாக அப்பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் தெரிவித்ததோடு இவ்வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள நகரபிதாவுக்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.




Leave a comment