‘பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய வரவு செலவு திட்டம்’ – அமைச்சர் பௌசி

Fawzy[1]கொழும்பு: பல அபிருத்திகளை உள்ளடக்கியதாக – ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றியமைக்கும் திட்டங்களையுடையதாக- வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்க வேண்டிய திட்டங்களையுடையதாக இம்முறை வரவு செலவு திட்டம் அமைந்துள்ளதென நகர அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.எம் பெளசி தெரிவித்துள்ளார்.

இன்று (27) நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் இவ்வாண்டு வரவசெலவு திட்டம் குறித்த விவாதம் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் பெளசி மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- நாடு முழுவதும் அறிவகங்களை ஸ்தாபிப்பது மட்டுமல்ல. 2016ஆம் ஆண்டில் தனிநபர் வருமானம் 4000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி 8 சதவீதமாக மேம்படுத்தவும் இந்த வரவுசெலவு திட்டத்தில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

 உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்திச் செய்யவும் – இந்நாட்டுக்கு வரும் முதலீட்டாளர்களது உள்ளத்தை கவரும் வகையிலான சூழலை நாட்டில் உருவாக்கவும் முதலீட்டுச் சந்தர்ப்பங்களை அதிகரிக்கச் செய்யவும் இந்த வரவு செலவு திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.பாகிஸ்தான்- இந்தியா – அவுஸ்திரேலியா – போன்ற நாடுகள் பாரிய அளவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. அதேபோன்று சீனி தொழிற்சாலையை அமைப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. அதற்காக சுமார் 4600 மில்லியன் அமெரிக்க  டொலர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

புடவை உற்பத்தியில் 6 சதவீதம் வளர்ச்சி காணப்படுகிறது. அதேபோல் 1000 பாலங்கள் புனர்நிர்மாணம் செய்வதற்கான புதிய திட்டமொன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது. நகரங்களில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வசதிகளை செய்துகொடுப்பதனூடாக நாட்டின் பிரதான நகரங்களின் வளர்ச்சிக்காக 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. திவிநெகும- கமநெகும- கமநெகும போன்ற திட்டங்களினூடாக கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை  உயர்த்தவும் இம்முறை வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். lk

Published by

Leave a comment