மிஸ்வாக் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டமும் பல் வைத்திய உண்மைகளும் – (தொடர் 9)

miswak

ஆசிர் 

சென்ற கட்டுரைத் தொடரில் பிறர்பாவித்த மிஸ்வாக்கை உபயோகிப்பது பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தையும் வாய்த்துர்வாடைக்கான காரணத்தையும் அதன் நோயியற் தன்மையும் பற்றிய ஆய்வைப் பார்த்தோம்.அல்ஹம்துலில்லாஹ்.

இம்முறை வாய்த்துர்வாடையை நீக்குவதற்கான சிகிச்சை முறைகளைப் பார்ப்போம்.

நோயை நிர்ணயித்தல்

நோயாளியை முறையான விதத்தில் அணுகுவதன் மூலம் தீர்மானிக்கலாம் இதன் போது எந்த நேரத்தில்இ எத்தனை தடவை? சாப்பாட்டடிற்குப் பிறகா? எந்த வகையான மருந்துகள் பாவிக்கப்படுகின்றன? வாயில் உலர்வுத் தன்மை உண்டாகின்றதா? என்பவை பற்றிய விபரங்கள் திரட்டப்படும்.

நவீன முறையில் வாயில் துர்வாடை உண்டாக்கக் கூடிய பதார்த்தங்களைக் கண்டறியக் கூடிய உபகரணங்களைக் கொண்டு அடிப்படைக் காரணத்தைக் கண்டறியலாம்.

சிகிச்சை

நோய்க்கான அடிப்படைக் காரணத்தை நீக்குவதுடன் சம்பந்தப்பட்ட சிகிச்சையே மிகவும் உகந்தது. உதாரணமாக முரசு நோய்கள்இ நாவிலுள்ள படிவுகளை நீக்குதல் போன்றவை. வாய் உலர்வுடன் சம்பந்தப்பட்டதாக அவதானிக்கப்பட்டால் உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கக் கூடிய சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வேறு ஏதாவது உடலில் காணப்படும் நோய்களின் தாக்கத்தினால்; உருவாகின்றது எனக் கண்டறியப்பட்டால் அதற்குரிய சிகிச்சை முதலில் வழங்கப்படவேண்டும். பிரதியீடாக தற்காலிகமாக துர்வாடையை நீக்குவதற்காக வாய் கழுவும் திரவியங்கள் பற்பசை போன்றவை பாவிக்கப்படலாம்.

வாய்ப்புண்கள் 

வாயில் சிரங்கு உண்டாவதற்கான காரணங்கள் 

வாயில் காணப்படும் மெல்லிய மென்சவ்வுப்படலத்தில் பல்வேறு காரணங்களின் பொருட்டு சிறு வாய்ப்புண்கள் தொடக்கம் பெரிய அளவிலான வாய்ப் புண்கள் ஏற்படுகின்றன. இவை தனியே வாயோடு மாத்திரம் சம்பந்தப்பட்டதாக அல்லது உடலில் ஏற்படும் வேறு நோய்களின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். மேலும் அவை ஆரம்பத்தில் சிறிய கொப்புளங்களாக உருவாகி அவை உடைந்து பின்னர் வாய்ப்புண்ணைத் தரக்கூடியதாக இருக்கலாம்.

பொதுவாக வாய்ப்புண்ணை இரண்டாகப்பிரிக்கலாம்.

1.கொப்புளங்களாக உருவாகி பின்னர் வாய்ப்புண்ணைத் தரக்கூடியவை
2.நேரடியாக வாய்ப்புண்ணைத் தரக்கூடியவை.
இந்த இரண்டு வகைகளையும் தொற்றுக்களால் உருவாகக் கூடியவை, தொற்றன்றி உருவாகக் கூடியவை என இரண்டாகப் பிரிக்கலாம்.

1. Vesiculo Bullouns Disease
⦁ தொற்றுக்களால் உருவாகக் கூடியவை 
பொதுவாக  Herpes குடும்பத்தைச் சேர்ந்த வைரசுக்களால் இவை உருவாகின்றன. நோயின் ஆரம்ப கட்டத்தில் வாயின் மென்சவ்வுப்படலத்தில் கொப்புளங்கள் உருவாகி பின்னர் அவை உடைந்து புண்ணை உண்டாக்கும். அவ்வாறான நோய்களாவன Primary Herpes Stomatitis , Herpes Labialis Cheken Pox , Herpes Zoster. 
⦁ அத்துடன் தொற்றுக்களல்லாத முறையில் சில தோலுடன் சம்பந்தப்பட்ட நோய்களும் வாயில் புண்ணை உண்டாக்கும்.

2.நேரடியாக வாய்ப்புண்ணை உண்டாக்கக் கூடிய நோய்கள்.
சில வைரசுத் தொற்றுக்களும், Becteria  உருவாக்கும் நோய்களும் வாயில் புண்ணை உருவாக்கக் கூடியவை இவற்றில் சிலது ஏனைய நோயின் அறிகுறியாக வாயில் உருவாகும் புண்ணாகும்.
உதாரணம் – Tuberculosis  – காசநோய்

Syphilis எனப்படும் பாலியல் தொற்று நோய்.
வாய்ப்புற்று நோய் – Oral Cancers  

புற்று நோய்களின் வகைகளில் முன்னிலையில் காணப்படக்கூடியவைகளில் வாய்ப் புற்றுநோயும் ஒன்றாகும். பொதுவாக உதடு, நாக்கு, கண்ணத்தின் உட்பகுதி போன்றவைகளில் அதிகமாக இது ஏற்படும். இதன் அறிகுறிகளில் ஒன்றாக வாய்ப்புண்களும் அடங்கும். பொதுவாக நீண்ட நாட்களுக்கு சுகமாகாத நிலையிலும், சற்று பெரிதாகவும், சுற்றியுள்ள பகுதிகள் சற்று தடித்து கணமுடையதாகவும், வலியற்றதுமான வாய்ப்புண்களாக இவை காணப்படும். இவ்வாய்ப் புண்களின் உட்பகுதிகளினூடாக புற்று நோய் பரவிச் செல்லும். எனவே இவ்வாறான வாய்ப்புண்களுடையவர்கள் தாமதியாது உரிய நேரத்தில் வைத்தியரை அணுகுவது எதிர்காலத்தில் விளைய இருக்கும் தகாத விளைவுகளைத் தடுக்க வல்லது.

தொடரும்……….

தொகுப்பு – உம்மு ஷைமா அஸ்ஸாலிஹாத்

Published by

Leave a comment