பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டின் பேரில் 1718 பேர் கைது!

rapeகொழும்பு: பெண்களை 2005 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றத்திற்காக 1718 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2005 இலிருந்து இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 2008 இல் 319 ஆக அதிகரித்துள்ளது. பின்னர் 2012 இல் எண்ணிக்கை குறைந்து 252 பேர் கைதாகியுள்ளனர்.

குறிப்பாக 22 வயது முதல் 50 வயது வரையிலானவர்களே அதிக அளவில் பெண்களை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர்.

2005 இல் 95 பேரும், 2006 இல் 174 பேரும், 2007 இல் 235 பேரும், 2008 319, 2009 – 227, 2010 – 250, 2011 – 166, 2012 இல் 252 பேரும் கைதாகி சிறையிலடைக்கப் பட்டுள்ளனர்.

2005 முதல் 2012 வரையிலான காலப் பகுதியில் 22 வயதுக்கும் 30 வயதுக்கும் உட்பட்டவர்கள் 463 பேர் பாலியல் வல்லுறவு குற்றவாளிகளாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர். இதேபோன்று 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட 691 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

40 வயதுக்கும் 50 க்கும் இடைப் பட்டவர்கள் 501 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 33 பேரும், 50 க்கும் 60 க்கும் இடைப்பட்டவர்கள் 50 பேரும் கைதாகி சிறையிலடைக்கப் பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கேட்ட வாய்மொழி மூல விடைக்கான கேள்வியொன்றுக்கு விடையளிக்கும் போதே அமைச்சு தெரிவித்தது.

கேள்வியை கேட்ட அஜித் பி. பெரேரா சபையில் இல்லாததால் பதில் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியின் அனுமதியுடன் சபையில் சமர்ப்பிக்கப் பட்டது. tk

Published by

Leave a comment