Category: Your Kattankudy
-
சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தினம் காத்தான்குடியில் அனுஷ்டிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘தடைகளை வெற்றிகொண்டு உள்ளீட்டு சமூகத்தினை நோக்கிப் பிரவேசிப்போம்’ எனும் தொனிப்பொருளில் கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் கீழ் இயங்கும் காத்தான்குடி ஸாஹிறா விஷேட பாடசாலையின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தின நிகழ்வு 03-12-2013 இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
-
உம்றா விசா விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நாளை ஆரம்பம்
கொழும்பு: புதிய உம்றாஹ் யாத்திரை காலத்திற்கான உம்றாஹ் விசா விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடுகள் நாளை புதன் கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்றாஹ் விவகார பிரதி அமைச்சர் இஸ்ஸா ரொஹாஸ் குறிப்பிட்டார்.
-
ஸபர் மாத தலைபிறை பார்க்கும் மாநாடு
கொழும்பு: கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெறவுள்ள ஹிஜ்ரி 1435 ஸபர் மாதத்திற்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று (3) செவ்வாய் மாலை மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.
-
21 ஆண்டுகள் ஏக்கம் தீருமா? ஒருநாள் தொடரை வெல்ல இந்தியா தீவிரம்
ஜொகனஸ்பர்க்: தென் ஆபிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை, ஒருநாள் தொடரை வென்றது இல்லை. இம்முறை அசத்தல் “போர்மில்’ உள்ள இந்திய அணி, 21 ஆண்டுக்குப் பின் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றி சாதிக்கும் என்று நம்பப்படுகிறது.
-
சர்வதேச கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரிட்டன் ராணியை முந்தினார் சோனியா
நிவ்யோர்க் : சர்வதேச அளவில் முன்னணி இணையதள செய்தி நிறுவனமான ஹப்பிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள உலகின் முதல் 20 இடங்களில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா இடம்பெற்றுள்ளார். இப்பட்டியலில், பிரிட்டன் மகாராணி எலிசபெத்திற்கு முந்தைய இடத்தில் சோனியா உள்ளது குறிப்பிடத்தக்கது
-
அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது காழ்புணர்வு கொண்டு அவரை தமிழ் இனத்தை அழிக்கும் நபராக காட்டி செய்திகளை வெளியிடுவதை வண்மையாக கண்டிக்கின்றேன் – மாகாண சபை உறுப்பினர் முஹம்மத் ஜனுாபர்
அபூ அஸ்ஜத் முல்லைத்தீவு: வடக்கில் மட்டும் அல்ல இலங்கை தேசத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் சேவை செய்யும் ஒரு அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் செயற்படுவதாகவும், அவர் மக்களுக்கு ஆற்றும் பணிகளை பொருத்துக் கொள்ள முடியாத பிரிவினை வாத சக்திகளின் பின்னால் இருக்கும் தமிழ் இணையம் ஒன்று தொடர்ந்து அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை
-
பொலிஸ் அதிகாரிகள் என கூறி பணமோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் கைது
பொலிஸ் உயர் அதிகாரிகளின் பெயரை கூறி தொலைபேசியில் அழைப்பினை ஏற்படுத்தி பொதுமக்களிடம் கப்பம் அறவிட்டு வந்த பிரதான சந்தேக நபர் ஒருவரை மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிராக கோவணத்துடன் ஆர்ப்பாட்டம்
கொழும்பு: நிவாரணம் இல்லாத வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை 4 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று அகில இலங்கை கமநல சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
-
காத்தான்குடி நகர சபையின் 11 தமிழ் -முஸ்லிம் சமயா சமய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு
-பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் 11 ஆண் -பெண் சமயா சமய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு 02-12-2013 இன்று திங்கட்கிழமை காலை காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில் நகர சபை செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி அஷ்-ஸஹ்றா ஹிஸ்புல்லாஹ் முன்பள்ளிக் கலை விழா: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு
– முகம்மட் சஜி காத்தான்குடி: புதிய காத்தான்குடி அஷ்-ஸஹ்றா ஹிஸ்புல்லாஹ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் இவ்வருடத்திற்கான மாணவர் கலைவிழா நேற்று மாலை காத்தான்குடி அன்வர் வித்தியாலய மண்டபத்தில் ஸஹ்றா ஹிஸ்புல்லாஹ் முன்பள்ளியின் தலைவர் அப்துல் வகாப் தலைமையில் இடம் பெற்றது.
-
நாடெங்கும் இடியுடன் மின்னல் தாக்கம்: கடும் காற்றுடன் மழை
கொழும்பு: வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் தளம்பல் நிலை காரணமாக நாடுமுழுவதும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் அதேவேளை, நாட்டின் ஏனைய இடங்களில் பிற்பகல்