காத்தான்குடி நகர சபையின் 11 தமிழ் -முஸ்லிம் சமயா சமய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

DSC06308-பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் 11 ஆண் -பெண் சமயா சமய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு              02-12-2013 இன்று திங்கட்கிழமை காலை காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில் நகர சபை செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

 இதன் போது காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பரினால் 11 தமிழ் -முஸ்லிம் சமயா சமய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான றவூப் ஏ மஜீட், பாக்கீர், நகர சபை பிரதம முகாமைத்துவ உதவியாளர் நியாஸ் உட்பட நகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 இங்கு வழங்கிவைக்கப்பட்ட நிரந்தர நியமனத்தில் 08 ஆண்களுக்கும் 3 பெண்களுக்குமாக மொத்தம் 11 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment