சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தினம் காத்தான்குடியில் அனுஷ்டிப்பு

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ‘தடைகளை வெற்றிகொண்டு உள்ளீட்டு சமூகத்தினை நோக்கிப் பிரவேசிப்போம்’ எனும் தொனிப்பொருளில் கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் கீழ் இயங்கும் காத்தான்குடி ஸாஹிறா விஷேட பாடசாலையின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தின நிகழ்வு 03-12-2013 இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

 இங்கு ஸாஹிறா விஷேட பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் முகமாக பல்வேறு இஸ்லாமிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது.

 இதன் போது சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தின நிகழ்வில் பங்குபற்றிய விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு மட்டு-மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் இஸ்மாலெவ்வை, மட்டு-மத்தி கல்வி வலய விஷேட கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் சரீப் உள்ளிட்ட அதிதிகளினால் விஷேட பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.

 கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.எச்.எம்.பஸீர் ஜேபி தலைமையில் ஸாஹிறா விஷேட பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில்  இடம்பெற்ற சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தின நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.பி.எம்.இஸ்மாலெவ்வை கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய விஷேட கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.சரீப், கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் செயலாளர் எம்.ஐ.எம்.பஷீர் (மதனி), காத்தான்குடி ஸாஹிறா விஷேட பாடசாலை முகாமையாளர் எம்.எச்.ஏ.எம்.இஸ்மாயில், ஸாஹிறா விஷேட பாடசாலை அதிபர் ஏ.அன்வர் சாதிக்,காத்தான்குடி வர்த்தக சங்கத் தலைவர் பி.ரி.எம்.பாரூக் ஜேபி , புதிய காத்தான்குடி பெரிய ஜூம்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் எம்.எம்.ஆதம் லெப்பை (பலாஹி) உட்பட ஆசிரிய ஆசிரியர்கள் , ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

???????????????????????????????

???????????????????????????????

???????????????????????????????

Published by

Leave a comment