நாடெங்கும் இடியுடன் மின்னல் தாக்கம்: கடும் காற்றுடன் மழை

4LEE_Lightning-md[1]கொழும்பு: வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் தளம்பல் நிலை காரணமாக நாடுமுழுவதும் இடி, மின்னல்  மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.  வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் விட்டு விட்டு மழை பெய்யும்  அதேவேளை, நாட்டின் ஏனைய இடங்களில் பிற்பகல்

அல்லது இரவு வேளைகளில் மழையை  எதிர்பார்க்க முடியுமெனவும் கடமைநேர அதிகாரி வசந்தகுமார் தெரிவித்தார்.

இக்காலப் பகுதியில் மழை வீழ்ச்சியினளவு சுமார் 100 மில்லி மீற்றரிலும் அதிகரிக்கும்.  கடும் மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் ஒருசில நிமிடங்களுக்கு பலத்த காற்று  வீசுவதற்கான சந்தர்ப்பங்களுண்டு எனவும் அவர் கூறினார். இதேவேளை, மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய இழப்புக்கள் குறித்து பொதுமக்கள்  விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

கடலிலும் காலியிலிருந்து மட்டக்களப்பிற்கூடாக யாழ்ப்பாணம் வரையில் மழை பெய்யும் அதே  சந்தர்ப்பத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படுமெனவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது. 

சனிக்கிழமை இரவு கடும் மழையுடன் வீசிய காற்றினால் வெள்ளவத்தை தொடர் மாடிகளின்  கூரைகள் பறந்து சென்று விழுந்ததில் பல வீடுகளின் கூரைகள் மற்றும் வாகனங்கள்  சேதமடைந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. TK

Published by

Leave a comment