பொலிஸ் உயர் அதிகாரிகளின் பெயரை கூறி தொலைபேசியில் அழைப்பினை ஏற்படுத்தி
பொதுமக்களிடம் கப்பம் அறவிட்டு வந்த பிரதான சந்தேக நபர் ஒருவரை மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களிடம் கப்பம் அறவிட்டு வந்த பிரதான சந்தேக நபர் ஒருவரை மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொத்துவில் பொலிஸ் நிலைய அதிகாரி அஜித்குமார பிட்டிகலவின் பெயரைக் கூறி தொலைபேசியில் கப்பம் பெற்றதாக கூறப்படும் பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பிரதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே இச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் மிரிஹான விஷேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
VKI
Leave a comment