Category: Your Kattankudy
-
உறைந்து போனது அமெரிக்கா: 21 பேர் பலி!
– SHM அட்லான்டா: அமெரிக்காவை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது கடும் பனி. வரலாறு காணாத அளவுக்கு என்று சொல்லும் அளவுக்கு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அமெரிக்காவும் உறைந்து போய்க் கிடக்கிறது.
-
9 வகை மருத்துவ பிரச்சனையால் முஷரப் அவதி
– SHM இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் 9 வகையான மருத்துவ பிரச்சனைகளால் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 2ம் தேதி வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றத்திற்கு சென்ற வழியில் முஷாரப்புக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
யாழில் பிரமாண்டமான நீதிமன்றக் கட்டடத் திறப்பு விழா!
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரமாண்டமான முறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று நீதிமன்றக் கட்டடத் தொகுதிகள் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அழைப்பின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் பங்குபற்றுதலோடு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவர்களால் வியாழக்கிழமையன்று (09.01.2014) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளன.
-
பொங்கல் மற்றும் பட்டிப் பொங்கல் விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட பொங்கல் மற்றும் பட்டிப் பொங்கல் விழா எதிர்வரும் 17ஆம்திகதி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி .பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
-
காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கமும், பைத்துல் ஹிக்மாவும் சந்திப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் அக்கரைப்பற்றில் கல்விப் பணி செய்கின்ற ‘பைத்துல் ஹிக்மா’ நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினருடனான கலந்துரையாடல் நிகழ்வொன்றினை அக்கரைப்பற்று ஆயிஸா பாலிகா மகாவித்தியாலயத்தில் நடாத்தியது.
-
கல்குடா கல்வி வலயத்தின் கல்வி, கலாசார மற்றும் சமூகமேம்பாட்டு அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கல்குடா: கல்குடா கல்வி வலயத்தின் கல்வி, கலாசார மற்றும் சமூகமேம்பாட்டு அபிவிருத்தி தொடர்பிலான விசேட கலந்துரையாடல் கோறளைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் வலயக் கல்வி அலுவலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
-
கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் வாழைச்சேனை: கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி தினேஸ் கௌரி தலைமையில் (07.01.2014) நேற்று செவ்வாய்க்கிழமை கோறளைப்பற்று-வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
-
‘கல்வித் துறையில் எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் இடம் தர முடியாது’: வட மாகாண சபை உறுப்பினர் அ. அஸ்மின் வலியுறுத்தல்
– வாரஉரைகல் யாழ்ப்பாணம்: 30-12-2013 அன்று வடக்கு மாகாண கல்வி அமைச்சில், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கௌரவ. குருகுலராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற வலயக் கல்விப்பணிப்பாளர்கள், மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது வடக்கு மாகாண சபை உறுப்பினர்
-
காத்தான்குடி ஊர் வீதியை புனருத்தாரணம் செய்வது தொடர்பாக அவ்வீதியில் வசிப்பவர்களிடம் காத்தான்குடி நகர சபையினால்வழங்கப்பட்ட அறிவித்தல் கடிதம்
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி ஊர் வீதியை புனருத்தாரணம் செய்வது தொடர்பாக நேற்று (07.01.2014) அவ்வீதியில் வசிப்பவர்களிடம் காத்தான்குடி நகர சபையினால் அறிவித்தல் கடிதம் விநியோகிக்கப்பட்டன.. இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
-
தெற்காசியாவில் முதற் தடவையாக டிக்கெட்டுக்கு பதிலாக முற்கொடுப்பனவு அட்டை இலங்கையில் அறிமுகம்
கொழும்பு: இந்த வருடத்தில் மேல் மாகாணத்திலுள்ள அநேகமான மார்க்கங்களில் பஸ் டிக்கெட்டுக்குப் பதிலாக முற்கொடுப்பனவு அட்டை முறையை அறிமுகப்படுத்த இருப்பதாக மேல் மாகாண போக்குவரத்து அமைச்சர், உபாலி கொடிகார தெரிவித்தார். இது தவிர சகல வீதிகளிலும் 15 ஆம் திகதி முதல் இ. போ. ச. தனியார்
-
பாம்ஒயில் இறக்குமதி செய்வதாக ஆவணங்களை காண்பித்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்த 16,000 லீற்றர் எதனோல்
கொழும்பு: பாம்ஒயில் இறக்குமதி செய்வதாக ஆவணங்களை காண்பித்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்த 16,000 லீற்றர் எதனோலை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சுமார் 20 அடி நீளமான கொள்கலனுக்குள் 80 பீப்பா எதனோல் இருப்பதை சுங்க அதிகாரிகள் நேற்று கண்டுபிடித்தனர். எதனோலை இறக்குமதி செய்ததாக கூறப்படும் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
வங்கதேச தேர்தல்: ஹஸீனா கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது
– SHM டாக்கா: வங்காளதேசத்தில் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு ஏற்கனவே 153 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 147 தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலை வங்க தேசத்தின் முக்கிய எதிர்கட்சியான வங்கதேச தேசிய கட்சி புறக்கணித்தது.